தினை அதிரசம் செய்யும் முறை ..!
மிகவும் சுவையான ஆரோக்கியமான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய தினை அதிரசம் மற்றும் அரிசி அதிரசம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..!
முதலில் தினை அதிரசம் எப்படி செய்வது என்பதை பற்றி காண்போம்… பச்சரிசியில் அதிரசம் செய்முறையை தெரிந்து கொள்ள கீழ் உள்ள link கிளிக் செய்யவும்..!
பச்சரிசியில் அதிரசம் செய்யும் முறை ..!
தேவையான பொருட்கள்:
- தினை – 2 கப்
- வெல்லம் – 2 கப்
- ஏலக்காய் – 3
- உப்பு – ஒரு துளிக்கு குறைவாக சுவை கூட்டுவதற்கு போடுகிறோம்.
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
ஸ்பெஷலான முட்டை சாண்ட்விச் மற்றும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் ரெசிபி !!!
தினை அதிரசம் செய்யும் முறை :
தினை அதிரசம் செய்யும் முறை ஸ்டேப்: 1
தினையை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்.
நன்றாக ஊறிய தினையை வடிகட்டி விட்டு மிக்சியில் போட்டு ஈரமாக மைபோன்று அரைத்துக்கொள்ளவும்.
தினை அதிரசம் செய்யும் முறை ஸ்டேப்: 2
பின்பு அதனுடன் ஏலக்காயையும் சேர்த்து அவற்றுடன் அரைக்கவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அந்த வெல்லம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.
தினை அதிரசம் செய்யும் முறை ஸ்டேப்: 3
வெல்லம் கொதித்து கெட்டிப் பாகாக வரும் போது, ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அவற்றில் பாகை போட்டு, அவற்றை கையால் உருட்டினால் கரையாமல் கெட்டியாக உருட்ட வரவேண்டும்.
தினை அதிரசம் செய்யும் முறை ஸ்டேப்: 4
பின்பு அந்த பாகை தினை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கரண்டிக்கம்பால் அல்லது மத்தின் அடிப்பகுதியை கொண்டு விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
பாகை ஊற்றும் போது கவனம் தேவை.
பாகின் சூட்டிலேயே மாவு வெந்துவிடும்.
கை படாமல் நன்றாக கிளறி ஆறியதும் மாவை மூடி வைக்கவும்.
பின்பு மறுநாள் அல்லது அதற்கு அடுத்தநாள், இல்லையெனில் ஒருவாரம் கழித்து கூட அதிரசம் சுடலாம்.
தினை அதிரசம் செய்யும் முறை ஸ்டேப்: 5
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் நன்றாக காய வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும், வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய உருண்டை அளவு மாவை எடுத்து, தட்டி கொண்டு எண்ணெய் காய்ந்ததும், பொறித்து எடுக்கவும்.
தினை அதிரசம் செய்யும் முறை ஸ்டேப்: 6
எண்ணெய் ரொம்பவும் சூடாக இருக்க கூடாது. ஏன்னெனில் கருக்குமே தவிர உள்ளே இருக்கும் மாவு வேகாது. எனவே எண்ணெய் குலோப் ஜாமூன் சுடும் பதமாக இருக்கலாம்.
தினை அதிரசம் செய்யும் முறை ஸ்டேப்: 7
அதிரசத்தை அடுப்பில் இருந்து எடுத்த பின் ஒரு தட்டில் வைத்து அடிப்பக்கம் ஒரு தட்டையான கிண்ணத்தால் அழுத்தினால் உப்பியிருக்கும் அதிரசம் தட்டையாகிவிடும்.
பின்பு மற்ற மாவுக்களையும் இப்படியே செய்ய வேண்டும்.
அவ்வளவுதான் தினை அதிரசம் ரெடி.
சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!
அதிரசம் செய்யும் முறை ..!
இதுவரை தினை அதிரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டோம், இப்போது பச்சரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்பதை பற்றி இப்போது நாம் பார்ப்போம் வாங்க..!
தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு அதிரசம் செய்ய):
- பச்சரிசி – 750 கிராம்,
- வெல்லம் – 500 கிராம்,
- தண்ணீர் – 100 – 150 மில்லி,
- ஏலக்காய், சுக்கு, நெய் – சிறிதளவு,
- கடலை எண்ணெய் (அல்லது) ரீஃபைண்டு ஆயில் – ஒரு லிட்டர்.
- (1 படி அல்லது ஒன்றரை கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ வெல்லம், 200 முதல் 250 மில்லி தண்ணீர் என்கிற கணக்கில் எடுத்துக்கொள்ளவும்)
அதிரசம் செய்யும் முறை ..!
Adhirasam recipe in tamil – STEP: 1
.
அதிரசம் செய்யும் முறை முதலில் பச்சரிசியை அலசி 20 நிமிடம் நன்றாக ஊறவைத்து, பின்னர் அரிசியில் ஈரப்பதம் இல்லாதவாறு பருத்தித் துணியில் கொட்டி உலர்த்தவும்.
Adhirasam recipe in tamil – STEP: 2
நன்கு உலர்த்திய அரிசியை ரைஸ் மில்லில் கொடுத்து அதிரசத்துக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லி, அரைத்து வாங்கவும். அல்லது, வீட்டு உரல்/மிக்ஸி மூலமாக அரிசியில் 75% மாவாகவும், 25% குருணையாகவும் இருக்கும்படி இடித்துக்கொள்ளவும்.
Adhirasam recipe in tamil – STEP: 3
அதிரசம் செய்வதில் முக்கியமான வேலை, பாகு காய்ச்சுவது. வெல்லத்தை நன்றாக இடித்து, சட்டியில் வைத்து, தண்ணீர் ஊற்றி, காய்ச்சவும். அடிபிடிக்காமல் இருக்க, தொடர்ந்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். கம்பி பதம் வந்தவுடன் நிறுத்தவும். (பாகைக் காய்ச்சி, ஒரு துளியை தண்ணீர் இருக்கும் ஒரு பாத்திரத்தில் விழும்படி செய்தால், இலகுவாகவும் இல்லாமல், கெட்டியாக இல்லாமல் கம்பி போல நீண்டு விழுந்தால் கம்பி பாகு பதம்).
Adhirasam recipe in tamil – STEP: 4
பொடித்த ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்க்கவும் (விருப்பத்துக்கு ஏற்ப). காய்ச்சிய பாகு இளஞ்சூட்டில் இருக்கும்போது, இடித்து வைத்திருக்கும் அரிசி மாவை சிறிது சிறிதாகக் கலக்கவும். கலக்கும்போது கட்டி படாமல் தொடர்ந்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டியது முக்கியம்.
இந்தப் பாகு, அரிசி மாவுக் கலவையை 7 – 8 மணி நேரம் அப்படியே ஊறவிடவும். இரண்டு நாட்கள் வரைகூட இது கெடாமல் இருக்கும்.
Adhirasam recipe in tamil – STEP: 5
தயாரித்து வைத்திருக்கும் மாவு இறுகியிருக்கும் என்பதால், அதிரசம் செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கைகளால் கலந்துகொண்டால், அதிரசம் செய்ய எளிமையாக இருக்கும். கூடவே, லேசாக மாவையும் தூவிக் கலப்பது நல்லது.
இப்படிச் செய்யும்போது, கை படுவதாலும், தண்ணீர் சேர்ப்பதாலும் இந்த மாவை அன்றைக்கே அதிரசம் செய்யப் பயன்படுத்துவது அவசியம். இல்லையென்றால் மாவு அதிகமாகப் புளித்து வீணாகிவிடும்.
Adhirasam recipe in tamil – STEP: 6
மாவை சிறிது எடுத்து உருட்டி, தட்டி, சட்டியில் நன்றாகக் காய்ந்த கடலை எண்ணெய் அல்லது ரீஃபைண்ட் ஆயிலில் விடவும். அப்படித் தட்டும்போது, நெய்/எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது கனமான பிளாஸ்டிக் கவரில் (ரீஃபைண்டு ஆயில் கவரை கட் செய்து, அதன் உட்புறம்) வைத்துத் தட்டினால், ஒட்டிக்கொள்ளாமல் வரும். வெந்த பதம் பார்த்து அதிரசத்தை எடுக்கவும்.
சுட்ட அதிரசங்களை எண்ணெய் வடியவிட்டு, பாத்திரத்தில் வைக்கவும்.
இவ்வாறு செய்யப்படும் அதிரசம் ஒரு வாரம் வரை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்!
சிம்பிளான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி ?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.