குதிரைவாலி தோசை செய்முறை விளக்கம்..!
குதிரைவாலி தோசை செய்முறை: பிரண்டை பசி உணர்வை தூண்டும். குதிரைவாலி அரிசி வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும். இன்று இரண்டையும் வைத்து சத்தான பிரண்டை குதிரைவாலி தோசை செய்முறை விளக்கம் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
தோசை செய்முறை விளக்கம்..!
செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை..! |
தேவையான பொருட்கள்:
- குதிரைவாலி அரிசி – 2 கப்
- உளுந்தம் பருப்பு – 1/4 கப்
- நுனிக் கொழுந்து பிரண்டை துண்டுகள் – 10
- வெந்தயம் – சிறிதளவு
- உப்பு மற்றும் நல்லெண்ணெய் – தேவையான அளவு.
குதிரைவாலி தோசை செய்முறை:
* குதிரைவாலி, வெந்தயம் மற்றும் உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
* பின்பு ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
* பின்பு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
* பிரண்டையை தோல் நிக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
* வதக்கிய பிரண்டை ஆறியவுடன் குதிரைவாலி மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து, 8 மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மாவு புளித்திருக்கும்.
* பிறகு தோசை கல்லில் தோசையாக ஊற்றி, தோசை வெந்ததும் திருப்பி போட வேண்டும். தோசை இருபுறமும் வெந்ததும் எடுக்க வேண்டும்.
* இந்த தோசையை காரச் சட்னியுடன் அனைவருக்கும் பரிமாறவும்.
சுவையான சமையல் முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை..! |
இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்பு |