கோதுமை மாவு இருந்தால் நைட்டு இதை செய்து சாப்பிடுங்கள்..!

கோதுமை மாவு ரெசிபி செய்வது எப்படி..?

எப்போதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என சாப்பிடுவதற்கும் சரி, செய்வதற்கும் சரி அலுத்து போயிருக்கும். ஆகவே உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து டின்னருக்கு அருமையான கோதுமை மாவு வைத்து அடை செய்யலாம். இதனை சாப்பிடுவதற்கு கார அடை சாப்பிடுவது போல் இருக்கும். வாங்க அது எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்..!

கோதுமை மாவு அடை செய்வது எப்படி..?

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

 1. கோதுமை மாவு – தேவையான அளவு
 2. ரவை – 2 டேபிள் ஸ்பூன்
 3. பச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
 4. பூண்டு – 3
 5. இஞ்சி – சிறியளவு
 6. சீரகம் – சிறிதளவு
 7. மிளகாய் – 4
 8. எண்ணெய் – தேவையான அளவு
 9. கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 10. கடுகு – 1/2 டீஸ்பூன்
 11. கேரட் –
 12. தக்காளி – 1
 13. வெங்காயம் –
 14. கருவேப்பிலை – 1 கொத்து
 15. கொத்தமல்லி – 2 கொத்து
 16. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப்: 1

 கோதுமை மாவு அடை

முதலில் மாவை கரைத்து கொள்ளவும். அதாவது கோதுமை மாவு – தேவையான அளவு , ரவை – 2 டேபிள் ஸ்பூன், பச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டேப்: 2

 கோதுமை மாவு அடை செய்வது எப்படி

பின்பு மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் பூண்டு, மிளகாய், இஞ்சி, சீரகம்  அனைத்தையும் சேர்த்து ஒரு முறை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஸ்டேப்: 3

அடுத்து கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு சேர்த்து ஓரளவு பொரிந்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு முறை வதக்கவும்.

 கோதுமை மாவு அடை செய்வது எப்படி

வதக்கியதும் அதில் கேரட்டை சீவி அதில் சேர்க்கவும். அத்தனையும் ஒரு முறை வதக்கவும், கடைசியாக தக்காளி சேர்த்து வதக்கவும். இறக்குவதற்கு கொஞ்சம் முன்னாடி கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 4

 கோதுமை மாவு அடை செய்வது எப்படி

வதங்கியதும் இதை நாம் கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்துக் கொள்ளவும். அதேபோல் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள பூண்டு மிளகாய், இஞ்சி அனைத்தையும் கலந்து உப்பு உள்ளதா என்று பார்த்து கொண்டு தேவை என்றால் சேர்த்துக் கொள்ளவும்.  அவ்வளவு தான் மாவு ரெடி ஆகிவிட்டது.

தோசை கல்லை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்தாலும் சரி நெய் சேர்த்தாலும் சரி எது வேண்டுமாலும் சேர்த்து அடை ஊற்றிக் கொள்ளலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉👉  உருளைக்கிழங்கு வறுவலை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி செய்து பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்