கோதுமை மாவு வெங்காய சமோசா செய்வது எப்படி..?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பிடித்த கோதுமை மாவு சமோசா செய்வது எப்படி என்று இந்த பதிவ வாயிலாக படித்து தெரிந்துகொள்ளலாம். பொதுவாக வெளியில் செல்லும் போது அதிகம் கடை வீதியில் விற்பது சமோசாதான். அதன் சுவையே தனி தான் இருந்தாலும். அதனை போல் வீட்டில் செய்தால் பிடிப்பதில்லை ஏனென்றால் அவர்கள் செய்வது வேறு மாதிரி இருக்கும் நாம் செய்வது வேறு மாதிரி இருந்தாலும் நமக்கு கடையில் உள்ள சமோசா மாதிரித்தான் வேண்டும் என்பதால் அதேபோல் சமோசா செய்வது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
சமோசா செய்யும் முறை எப்படி:
- கோதுமை மாவு – 200 கிராம்
- மைதா மாவு – 2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 2
- மஞ்சத்தூள் – 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
- தனியா தூள் – 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- ரவை – 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது அளவு
- உப்பு – தேவையான அளவு
சமோசா செய்யும் முறை எப்படி:
ஸ்டேப்: 1
முதலில் கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் 200 கிராம் கோதுமை மாவு எடுத்துகொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துகொள்ளவும்.
அதனுடன் 2 ஸ்பூன் எண்ணெய்யை அதில் ஊற்றி கொள்ளவும். பின்பு கலந்துகொள்ளவும். பின்பு சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சொல்லவில்லை என்று தண்ணீர் இல்லாமல் பிசைவேண்டாம். சப்பாத்து மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
ஸ்டேப்: 2
10 நிமிடம் மாவை ஊறவிடவும். பின்பு மாவு ஊறியதும் சப்பாத்தி போல் விசிறிக்கொள்ளவும். அதன் பிறகு தோசைக்கல்லில் சப்பாத்தி போல் போடாமல் சிறிது நேரம் மட்டுமே அதில் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
பின்பு சமோசாக்குள் வைப்பதற்கு மசாலா செய்ய நறுக்கிய வெங்காயம், எடுத்துக்கொள்ளவும், அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் ஆகிய மசாலாக்களை அளவுகளுடன் அதில் சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 4
அதேபோல் 2 ஸ்பூன் ரவை, சீரகம், பெருங்காயத்தூள், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலைகளை போட்டு இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பின்பு அதனை தனியாக வைக்கவும்.
ஸ்டேப்: 5
கொஞ்சம் மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் வைக்கவும். இப்போது முதலில் சப்பாத்தி போல் போட்டு வைத்த சமோசா சீட் எடுத்துக்கொள்ளவும். அதில் சமோசா போல் மடித்துக்கொண்டு செய்து வைத்த மசாலாவை அதில் சேர்க்கவும்.
அதன் பின் அதனை மடித்து எண்ணெயை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் அதில் ஒன்றன் பின் ஒன்றாக சமோசாவை போட்டு எடுக்கவும்.
இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சுவைசுவையான சமையல் குறிப்புகள் |