How to Fry Chicken for Biryani in Tamil!
வணக்கம்! New year வர போகிறது. வருடப்பிறப்பு அன்று என்ன புதிதாக சமைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கின்றீர்களா? புதிதாக எதும் ட்ரை செய்ய விரும்புகிறீர்களா?
New Year அன்று அனைவரும் நம்மிடம் அதிகம் கேட்பது இன்று உங்கள் வீட்டில் என்ன ஸ்பெஷல் என்றுதான்? வருடம் புதிதாக வருவது போன்று நீங்களும் புதிய வெரைட்டியான உணவுகளை சமைத்து உங்கள் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்களுக்கு உண்ண கொடுத்து வரும் புதிய வருடத்தினை சந்தோசமாக வரவேறுங்கள்!!!
பல வெரைட்டிகளில் பிரியாணிகள் இருப்பினும் நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது சுவையான சிக்கன் ஃப்ரை பிரியாணி எப்படி செய்வது என்பதனை பற்றித்தான்! இந்த பிரியாணியை நீங்களும் செய்து உங்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்துங்கள்!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
பிரியாணி மசாலா பொடி செய்வது எப்படி?
Biryani masala ingredients in tamil:
- பட்டை – 1 இன்ச் அளவு
- கிராம்பு – 4
- ஏலக்காய் – 4
- மிளகு – 1/4 டீஸ்பூன்
- சீரகம் – 1/4 டீஸ்பூன்
- ஜாவித்ரி – சிறிதளவு
- கல்பாசி – சிறிதளவு
- முந்திரி – 5 or 6
இவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு கொர கொர பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கம கமக்கும் இறால் பிரியாணி செய்வது எப்படி? | Prawn Biryani in Tamil!
சிக்கன் பிரியாணி செய்யும் முறை:
சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி – 2 கப்
- சிக்கன் – 1/2 கிலோ
- பட்டை – 1 துண்டு
- கிராம்பு – 4
- ஏலக்காய் – 4
- ஜாவித்ரி – சிறிதளவு
- நட்சத்திர சோம்பு – சிறிதளவு
- பிரியாணி இலை – சிறிதளவு
- கல்பாசி – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 2
- பெரிய வெங்காயம் – 1
- கொத்தமல்லி இலை
- புதினா இலை
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- மல்லித்தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
ஸ்டேப் 1:
முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவ வேண்டும். பின் பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் சிக்கனையும் நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 2:
குக்கரை அடுப்பில் வைத்து 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் ஆயில் ஊற்ற வேண்டும். அல்லது நெய்யினை கூட சேர்த்துக்கொள்ளலாம்.
ஸ்டேப் 3:
ஆயில் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்ரி, நட்சத்திர சோம்பு, பிரியாணி இலை, கல்பாசி, இவற்றை சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும்.
ஸ்டேப் 4:
பொரிந்த பின்னர் அதனுடன் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
ஸ்டேப் 5:
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப் 6:
இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும் அதனுடன் கொத்தமல்லி இலை அல்லது புதினா இலைகளை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?
ஸ்டேப் 7:
அதனுடன் தயிர், அரிசிக்கு தேவையான உப்பு, நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவில் இருந்து 2 டீஸ்பூன், மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
ஸ்டேப் 8:
பின் தண்ணீர் சேர்க்க வேண்டும். 1 கப் பாஸ்மதி அரிசிக்கு 1 1/2 கப் அளவிற்க்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். நாம் இங்கு 2 கப் பாஸ்மதி அரிசி எடுத்துள்ளதால் 3 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீருக்கு பதில் நீங்கள் தேங்காய் பால் கூட சேர்க்கலாம்.சுவை நன்றாக இருக்கும்.
ஸ்டேப் 9:
அதனை நன்கு கலந்து கொதிக்க விட வேண்டும். இப்போது நீங்கள் உப்பு சுவையை சரிபார்த்துக்கொள்ளலாம்.
ஸ்டேப் 10:
நன்கு கொதித்த பின் அதனுடன் நாம் ஊறவைத்து எடுத்து கொண்ட பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அரிசியானது லேசாக வெந்து வரும் வரை விசில் வைக்காமல் 3 அல்லது 4 நிமிடங்கள் மூடி வேக விட வேண்டும். இடை இடையில் திறந்து கலந்துகொள்ள வேண்டும்.
ஸ்டேப் 11:
3 அல்லது 4 நிமிடங்கள் வேகவைத்த பின்னர் தண்ணீரானது அரிசி அளவிற்கு சரிசமமாக இருக்கும் பதத்தில் வந்துவிடும்.
5 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?
ஸ்டேப் 12:
பின் அடுப்பினை குறைவான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து அடிப்பினை off செய்துவிட வேண்டும்.
சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 1
- தக்காளி – 1 பெரியது
- பச்சை மிளகாய் – 2
- தேவையான அளவு உப்பு – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- காரத்திற்க்கேற்ப மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
- கலருக்காக காஷ்மீரி மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- மல்லித்தூள் – 1/4 டீஸ்பூன்
- சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழம் -1/2
- ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஸ்டேப் 1:
ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தயிர், இஞ்சி பூண்டு விழுது, எலும்பிச்சை சாறு, ஆயில் இவற்றையெல்லாம் சேர்க்க வேண்டும்.
ஸ்டேப் 2:
பின் அதனை நன்கு கலந்து விட வேண்டும். சிக்கனுடன் மசாலா நன்கு சேரும்படி நன்றாக கலந்து விட வேண்டும்.
ஸ்டேப் 3:
அதனை 1 மணி நேரம் அல்லது 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 4:
தக்காளியை முதலில் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 5:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
ஸ்டேப் 6:
எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயத்தினை சேர்க்கவும். வெங்காயத்தை நன்றாக வதங்க விடவும்.
ஸ்டேப் 7:
பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கி கலந்துவிடவும்.
ஸ்டேப் 8:
அதனுடன் சிறுது மிளகாய் தூள் சேர்த்து நாம் ஊறவைத்துள்ள சிக்கனையும் சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்.
ஸ்டேப்9:
பின் சிக்கனை வேக விட வேண்டும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை. சிக்கனில் இருந்து வரும் தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டால் 1/4 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். பின் மூடி மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
ஸ்டேப் 10:
பிறகு தண்ணீரானது வற்றி இருக்கும் அதனை நன்கு கலந்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா 2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்.
ஸ்டேப் 11:
தண்ணீர் வற்றும் வரை சிக்கனை நன்றாக வேக வைக்கவேண்டும். சிக்கன் ஃப்ரை பதம் வரும் போது இறக்கி விட வேண்டும்.
வீட்டிலிருக்கும் 4 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்..!
இப்போது சுவையான பிரியாணி மற்றும் சேர்த்து சாப்பிட சிக்கன் பிரை தாயார். பிரியாணியுடன் சிக்கன் பிரையை சேர்த்து சாப்பிடுங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |