காளான் பிரியாணி செய்வது எப்படி? | Mushroom Biryani in Tamil

Advertisement

குக்கரில் காளான் பிரியாணி செய்வது எப்படி?

பிரியாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ரெசிபியாகும். பிரியாணியில் பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரியாணி பிடிக்கும். அனைத்து வகை பிரியாணியை விட காளான் பிரியாணி மிகவும் சுவையானதாக இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், சரி அனைவரும் சாப்பிட கூடிய காளான் பிரியாணியை நமது வீட்டிலேயே மிக எளிதாகவும் அதிக சுவையுடனும் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

காளான் பிரியாணி மிக சுவையாக செய்வது எப்படி?

Mushroom Biryani in Tamil

தேவையான பொருட்கள்:

  1. காளான் – 1/2 கிலோ
  2. பாசுமதி அரிசி அல்லது பிரியாணி அரிசி – 2 கப்
  3. வெங்காயம் – 1 (நறுக்கியது)
  4. தக்காளி – 2 (நறுக்கியது)
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  6. கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது)
  7. புதினா – 1/4 கப் (நறுக்கியது)
  8. பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
  9. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  10. நெய் – 3 டேபிள் ஸ்பூன்
  11. தேங்காய் பால் – 1/2 கப்
  12. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
  13. மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  14. மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  15. சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
  16. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  17. பிரியாணி இலை – 1
  18. ஏலக்காய் – 3
  19. இலவங்கம் – 2
  20. கிராம்பு – 5
  21. தண்ணீர் – 3 கப்
  22.  உப்பு – தேவையான அளவு
காளான் கிரேவி செய்வது எப்படி?

காளான் பிரியாணி செய்முறை விளக்கம்:-

ஸ்டேப்: 1

1/2 கிலோ காளானை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பிரியாணி செய்வதற்கு தயராக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

அதன் பிறகு அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும்.

ஸ்டேப்: 3

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நெய் ஊற்றவும் நெய் நன்கு சூடேறியதும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகிய பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

பின்பு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 5

பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து, வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

அதன் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 7

தக்காளி நன்கு வதக்கியதும், சுத்தம் செய்துள்ள காளானை சேர்த்து பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டேப்: 8

அதே சமயம், குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

ஸ்டேப்: 9

இவ்வாறு செய்தால் அருமையான சுவையில் காளான் பிரியாணி நமது வீட்டில் நாமே மிக எளிதாக செய்து விடலாம்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement