தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு வாசகங்கள்

Advertisement

தண்ணீர் சேமிப்பு வாசகங்கள்..!

சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்தையொட்டியே மனித வாழ்க்கை அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை குளம், குட்டைகளில் சேகரிக்கப்படும் நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தை நம்பியே பெரும்பாலான பகுதிகள் வாழ்கின்றன. பருவமழை பொய்க்கும் காலங்களில், இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நிலை பரிதாபத்துக்குரியது. விவசாயமும் செய்ய முடியாமல், அடிப்படை ஆதாரமான குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவு அலைந்து திரிகின்றனர்.

இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தண்ணீருக்கான தேவை பன்மடங்கு அதிகரிக்கும், நாட்டின் பல பகுதிகள் பூஜ்ஜிய தண்ணீரை எட்டவும் வாய்ப்புள்ளது. இதனால், மழை நீர் சேகரிப்பு என்பது மிகமிக அத்தியாவசியமாகிறது. இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தண்ணீர் சேமிப்பில் ஈடுபட்டால், நிச்சயமாக தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். சரி இந்த பதிவில் நீர் பாதுகாப்பிற்கு தண்ணீர் சேமிப்பு வாசகங்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது படிக்கலாம் வாங்க..

தண்ணீர் சேமிப்பு வாசகங்கள்:-

நீரின்றி அமையாது உலகு..

துளி துளி மழைத்துளி
அது நம் உயிர்த்துளி..

வான் தரும் மழை – அதை
வீணாக்குவது நம் பிழை..

மழை நீர்த் தொட்டி
நம் வாழ்வுக்கு வட்டி..

மழையால் ஆவது உலகு
ஆகையால் மரம் வளர்த்து பழகு..

நீரின்றி பசுமை இல்லை
பசுமை இன்றி நீர் இல்லை..

நீர் வளம் பெருக்குவோம்
நீர் வளம் காப்போம்..

மனிதனுக்கு அழகு மனம்
புவிக்கு அழகு மரம்..

மரம் வளர்ப்போம்
மனம் குளிர்வோம்..

உயிர்களைக் காக்க
தண்ணீரைக் காப்போம்..

இன்று சேமிக்கப்படும் தண்ணீர்
நாளை துடைக்கப்படும் கண்ணீர்..

அவசியம் அவசியம்
நீர் பாதுகாப்பு அவசியம்..

சேகரிப்போம் சேகரிப்போம்
மழைநீரை சேகரிப்போம்..

உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?
மழைநீர் சேகரிப்பு கட்டுரை

நீரின்றி அமையாது உலகு கட்டுரை

நீர் மேலாண்மை கட்டுரை

இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை  விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Tamil Katturai

 

Advertisement