அதிக வருமானம் தரும் வெண்டை சாகுபடி ..!

Advertisement

வெண்டை சாகுபடி தெளிவான விளக்கம்..!

தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் இவற்றை போன்று சந்தையில் அதிகளவு விற்பனையாகக்கூடிய ஒரு பயிர் தான் வெண்டைக்காய். இந்த வெண்டைக்காயை சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக சாம்பார், பச்சடி, பொரியல், புளிக்கறி, புளிக்குழம்பு என்று சைவ உணவுகளுக்கு அதிகளவு பயன்படுகிறது என்பதால் இவற்றின் தேவை அதிகம். எனவே விவசாயிகள் தற்போது தனிப்பயிராக பயிரிட்டு விற்பனையில் அதிக வருமானம் பெறலாம்.

இதையும் படிக்கவும்  குடைமிளகாய் சாகுபடி முறை..!

 

சரி வாங்க இப்போது வெண்டை சாகுபடி பற்றி காண்போம்.

வெண்டை சாகுபடி – பருவகாலம்:

வைகாசி, ஆனி, ஆடி போன்ற வறட்சி காலங்கள் இந்த வெண்டை சாகுபடிக்கு ஏற்ற பருவ காலங்கள் ஆகும்.

வெண்டை சாகுபடி – நிலம் தயாரிப்பு:

ஈரப்பதம் இல்லாத நிலத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

நிலத்தை தேர்வு செய்த பிறகு, ஒரு முறை உழுது செய்து, நிலத்தை இரண்டு நாட்கள் வரை காய விட வேண்டும்.

பின்பு திரும்ப ஒரு முறை உழுது செய்து நிலத்தை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

வெண்டை சாகுபடி – விதையளவு:

ஏக்கருக்கு 35 செ.மீ முதல் 45 செ.மீ வரை பாத்திகள் அமைக்கும் போது அதிகளவு விதைகள் தேவைப்படும்.

இருப்பினும் இந்த முறையில் செடிகள் கிளைகளை பொறுத்த வரை 2 அல்லது 3 கிளைகள் தான் விடுகின்றன.

அதுவே ஒரு ஏக்கருக்கு ஒரு அடிக்கு ஒரு அடி என்ற விதத்தில் பாத்திகள் அமைக்கும் போது விதையின் அளவு குறைக்கப்படுகிறது, அதாவது ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் போதுமானது.

குறிப்பாக இந்த முறையில் செடிகள் 4 முதல் 6 கிளைகள் வரை விடுகின்றனர். அதிக மகசூலும் பெறுகின்றனர்.

இதையும் படிக்கவும் லாபம் அள்ளி தரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி ..!

வெண்டை சாகுபடி – விதைக்கும் முறை:

ஏக்கருக்கு 2 1/2 கிலோ விதைகள் போதுமானது, இந்த விதைகளை விதைப்பதற்கு முன் 100 மில்லி பஞ்சகாவியவை எடுத்துக்கொண்டு அவற்றை தண்ணிரில் கலந்து விதைகளை 2 1/2 மணிநேரம் வரை ஊறவைத்து, பின்பு நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் அதிக மகசூல் பெற இயலும்.

வெண்டை சாகுபடி – உரம்:

இயற்கை முறையில் நாம் சாகுபடி செய்கின்றோம் என்றால் ஏக்கருக்கு 4 டன் தொழு உரத்தை அடி உரமாகவும், 1 டன் மண்புழு உரத்தை மேல் உரமாகவும் மற்றும் ஏக்கருக்கு 150 கிலோ வேப்பம்பிண்ணாக்கை செடிகளுக்கு உரமாக இடும்போது, பயிருக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து, அதிக மகசூல் பெற வழிவகுகிறது.

விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். பயிர் நன்கு வளர்ச்சி அடைந்து மகசூலை அதிகரிக்க பெரிதும் இது உதவுகிறது.

பயிர் பாதுகாப்பு:

மாவுப்பூச்சி தாக்குதல்களுக்கு:

வெண்டையில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு.

இதைத் தவிர்க்க வருமுன் காப்போம் முறையில் நடவு செய்த 25-ம் நாளில் இருந்தே, வாரம் ஒரு முறை பூச்சி விரட்டியைத் தெளித்து வர வேண்டும்.

இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக் கிலோ எடுத்து அவற்றை உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஊற வைக்க வேண்டும்.

5 நாட்கள் ஊறிய பிறகு கரைசலை எடுத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டு கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

2 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பைத் தூளாக்கிப் போட்டுக் கலக்க வேண்டும். அதனுடன், 200 கிராம் கல் உப்பைச் சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

இக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற கணக்கில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

இந்த இரண்டு கரைசல்களையும் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை கைத்தெளிப்பானால் தெளித்து வந்தால் பூச்சித்தாக்குதல் இருக்காது.

வெண்டை சாகுபடி – அறுவடை:

அதிக மகசூல் தரக்கூடிய பயிர் என்பதால் நன்றாக வளர்ந்த பயிர்களை வாரத்திற்கு ஒரு முறை, அறுவடை செய்து அதிக வருமானம் பெற இயலும்.

வெண்டை சாகுபடி – களை நிர்வாகம்:

நடவு செய்த 20 முதல் 25 நாட்களில் இருந்து ஒரு முறை களை எடுக்க வேண்டும். அதன் பிறகு 60-வது நாட்களில் களை எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கவும்  கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement