கருவேப்பிலை செடி வளர்ப்பது எப்படி.?
எல்லோர் வீட்டிலும் கருவேப்பிலை செடி வைத்திருப்பார்கள். ஆனால் சிலரது வீட்டில் மட்டும் தான் கருவேப்பிலை செடி செழிப்பாக இருக்கும். சிலரது வீட்டில் பூச்சியாகவும், இலைகள் இல்லாமலும் இருக்கும். இதற்காக நீங்கள் கடையில விற்கும் மருந்துகளை வாங்கி அடிக்க வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கருவேப்பிலை செடியில் பயன்படுத்தி அதன் இலைகளை அதிகப்படுத்தலாம். அது என்னென்ன பொருட்கள் எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவின் மூலமாக படித்து தெரிந்து கொள்வோம்.
மாடியில் கறிவேப்பிலை செடி வளர்த்தால் செய்ய வேண்டியது:
கருவேப்பிலை செடிக்கு நைட்ரஜன் சக்தி அதிகமாக தேவைப்படும். முதலில் கருவேப்பிலை செடியை வெயில்படும் இடத்தில் வைக்க வேண்டும்.
செடி வைப்பதற்கு செம்மண் சிறந்ததாக இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ எலுமிச்சை மரத்தில் காய்கள் அதிகமாக காய்க்க இதை செய்யுங்கள்..!
தொட்டியில் வேப்ப புண்ணாக்கை போட்டு செடியை வைக்கவும்.
ஒரு கப் புளிச்ச மாவை ஒரு வாளியில் ஊற்றி 3 மடங்கு தண்ணீர் ஊற்றி கலந்து இந்த தண்ணீரை கருவேப்பிலை செடியில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்றவும்.
தோட்டத்தில் கருவேப்பிலை செடி இலைகள் அதிகமாக வளர:
செடிக்கு தினமும் காய்கறி கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றவும்.
செடியில் பூச்சி பிடிக்காமல் இருப்பதற்கு வேப்ப எண்ணெயை தெளித்து விடவும்.
வெயில் காலங்களில் வாழைப்பழ தோலை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அல்லது சாம்பலை கரைத்து ஊற்றவும்.
முக்கியமாக செடியில் ஈரப்பதம் அதிகமாக இருக்க கூடாது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை வேப்ப புண்ணாக்கை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். இது போல் செய்வதினால் செடிகள் செழிப்பாக வளரும்.
இதையும் படியுங்கள் ⇒ கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |