வேளாண் கருவிகளை வாங்க 50 % மானியம் என்று வேளாண்துறை அறிவிப்பு

Advertisement

மானிய விலையில் வேளாண் கருவிகள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் வேளாண் கருவிகளுக்கான 50 % மானியம் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.  விவசாயிகளுக்கு  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இதன் மூலம் விவசாயிகளுக்கு மண்வெட்டி, இரும்புச்சட்டி, களைக்கொத்தி, கடப்பாரை போன்ற வேளாண் சார்ந்த தொழில்களுக்கு இந்த கருவிகளை வாங்குவதற்கு மானியமாக வேளாண்துறை அறிவித்துள்ளது. மேலும் இவற்றின் முழு விவரங்களையும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சிறு குறு விவசாய கருவிகள் மானியம்

 

வேளாண் கருவிகள்:

பொதுவாக விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு எவ்வளவுதான் நவீன கருவிகள் அதிகமாக வந்தாலும். விவசாயிகளுக்கு அன்றாடம் சாகுபடி செய்வதற்கு மண்வெட்டி, கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்தி போன்ற சிறு கருவிகள் விவசாயத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இது போன்ற வேளாண் கருவிகளை சிறு விவசாயிகளுக்கு மானியமாக வழங்குவதன் மூலம் அவர்களுக்கு செலவுகள் குறைந்து விவசாயமும் நல்ல முறையில் நடைபெறும் என்று வேளாண்துறை முடிவு செய்திருக்கிறது.

வேளாண் நிதி நிலை அறிக்கை:

வேளாண்துறைக்கு என்று தனி பட்ஜெட் என்பது மக்களிடையே அதிகமான வரவேற்பு பெற்றுள்ளதால்  அதிகமான திட்டங்களை விவசாய மக்களின் நலன் கருதி இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.  வேளாண் துறையின் அறிக்கை படி வேளாண் கருவிகளின் தொகுப்பு ஆனது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 1 லட்சம் நபர்களுக்கு ரூபாய் 15 கோடி ஒதிக்கீடு செய்து, 50% வரை மானியத்தில் வழங்கப்படும் என்று 2022 – 2023 ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் வேளாண் கருவிகள்:

வேளாண் கருவிகளை வாங்குவதற்கு 50 % என்ற அளவில் மானியம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதாவது  உதாரணத்திற்கு 3,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு வேளாண் கருவி 50% மானியத்தில்  1,500 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

இந்த வேளாண் திட்டமானது ஒவ்வொரு கிராமங்களிலும் பஞ்சாயத்து மூலம் செயல்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வேளாண் கருவி திட்டமானது ஒரு ரேஷன் கார்டில் இருக்கும் விவரங்களின் படி ஒரு வேளாண் குடும்பத்திற்கு ஒரு கருவி மட்டுமே வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

முக்கியமாக இந்த வேளாண் கருவிகளை பெண் விவசாயிகள், பழங்குடி விவசாயிகள், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள்,  உழவர் அட்டை வைத்துள்ளவர்கள், விதவை பெண்கள், மூன்றாம் பாலினம் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

வேளாண் கருவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:

வேளாண் தரும் 50% மானியத்தில் வாங்குவதற்கு விருப்பமுடைய விவசாயிகள்  உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யவேண்டும்.  மேலும்  ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவற்றில் உள்ள விவரங்களை இணையத்தளம் மூலமாக முன்பதிவு செய்துகொள்வது அவசியம். மேலும் இதற்கான விவரங்களை உங்கள் கிராமத்தில் இருக்கும் வேளாண் அலுவலரை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil
Advertisement