ஒரு நிமிட அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ் ..!
பெண்கள் வேலைக்கு செல்லும் அவசரத்திலும் மற்றும் குடும்பத்தை கவனித்து கொள்ளும் பொறுப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினாலும் அவர்களது அழகு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.
பெண்கள் குடும்ப பொறுப்புகளை சுமக்கும் அதே சமயத்தில், தங்களது அழகு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
வேலைக்கு போகும் பெண்களுக்கு நேரம் குறைவாக தான் இருக்கும். இருப்பினும் இந்த குறைந்த நேரத்திலும், உங்கள் அழகை மேம்படுத்துவதற்காக இவற்றில் ஒரு நிமிடத்திற்குள் செய்ய கூடிய சில அழகு குறிப்பு உள்ளன. சரி வாங்க ஒரு நிமிடத்திற்குள் செய்யக்கூடிய அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ் என்னென்ன என்று இவற்றில் நாம் காண்போம்.
மணப்பெண் அலங்காரம்..! Jadai alangaram photos..! Manapen alangaram..! |
அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ்1:
இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் பவுண்டேஷன் செய்தால் அது உங்கள் முகம் வீங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே அதை விட்டு விடலாம். ஆனால் உடனடியான ஜொலிப்பிற்கு பவுண்டேஷன் தேவை.
சரி அப்போ என்ன தான் பண்றது என்று கேட்கிறீங்களா பவுண்டேஷனை சரியான திசையில் அப்ளே பண்ண வேண்டும் இது தான் ட்ரிக். முதலில் முகத்தின் நடுவில் ஆரம்பித்து அப்படியே காதுகளுக்கு பரவச் செய்ய வேண்டும்.
அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ் 2:
பெண்கள் ப்ரோன்ஸரை அப்ளே பண்ணும் போது கைகளில் எடுத்து தங்கள் உள்ளங்கைகளால் முகத்தில் தேய்க்கின்றனர். இந்த முறை மிகவும் தவறானது.
உங்கள் முக வடிவம் மற்றும் ஹைலைட் யை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாக ப்ரோன்ஸரை எடுத்து முகத்தின்(பெண்கள் அழகு குறிப்பு) இரு பக்கங்களிலும் தடவிக் கொள்ள வேண்டும்.
பிறகு நெற்றியில் ஆரம்பித்து கன்னத்திற்கு வந்து அப்படியே தாடை வரை தடவி பரப்ப வேண்டும்.
அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ் 3:
சில பெண்களுக்கு முக அழகை கெடுப்பதற்காகவே இமைகளின் கீழ் பகுதியில் கருவளையம் இருக்கும். பெண்கள் இந்த கருவளையத்தை மறைப்பதற்காக கண்சீலரை பயன்படுத்துகின்றனர்.
இது சரியா, கண்சீலரில் ஒரு பகுதி எடுத்து அப்படியே கண்ணுக்குள் புதையுமாறு தடவிக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறானது. ஒரு முக்கோண வடிவத்தில் கண்சீலரை எடுத்து கண்ணுக்கு கீழே அப்ளே பண்ண வேண்டும்.
அதை அப்படியே உங்கள் கன்னம் வரை பரப்பி விட்டால் உங்கள் கருவளையம் மாயமாய் மறைந்து போகும்.
பெண்கள் அழகு குறிப்பு டிப்ஸ் 4:
பெண்கள் வேலைக்கு போகும் நேரத்தில் உங்கள் முகத்தில் உள்ள பருக்களை எல்லாம் மறைக்க முடியாமல் போகிடும். அதை எப்படி மறைப்பது என்ற நினைப்பிலே நேரம் போய்விடும். எனவே உங்கள் பருக்களை மறைக்க வேகமான 3 அழகு குறிப்புகள் உள்ளது.
முதலில் அதன் மேல் லேசான பவுண்டேஷன், அப்புறம் கண்சீலர் அப்ளே பண்ணுங்க கடைசியில் அந்த பகுதியை சுற்றி பவுடர் அப்ளே பண்ணா போதும் உங்கள் பருக்கள் தெரியாது.
அட எலுமிச்சை தோலில் மறைந்துள்ள பயன்கள் பற்றி தெரியுமா? |
பெண்கள் அழகு குறிப்பு டிப்ஸ் 5:
அதிக பெண்கள் தங்கள் பவுண்டேஷனை ப்ளன்டிங் செய்வதற்கு விரல்கள் அல்லது பிரஷ் யை பயன்படுத்துகின்றனர். இந்த முறையை பின்பற்றினால் அதிக நேரம் ஆகும்.
எனவே இதை ஈஸியாக முடிப்பதற்கு ப்ளன்டிங் ஸ்பான்ஞ்யை தண்ணீரில் நனைத்து மெதுவாக அப்படியே பரப்பி விட்டால் போதும். நீண்ட நேரத்திற்கு உங்க மேக்கப்(pengal alagu kurippu) கலையாமல் அப்படியே இருக்கும்.
அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ் 6:
உங்கள் உடலில் போதுமான நீர் சத்து இல்லாததால் அல்லது மோசமான காலநிலை மாற்றம் இவற்றால் உங்கள் உதடுகள் வறண்டு சீரற்று இருக்கும்.
உடனே இவற்றை சரி செய்ய எளிய வழி இதோ. உதடுகளில் பிரிந்த தோலை பிய்த்தால் உங்களுக்கு வலியும் இரத்தமும் தான் வரும்.
இதற்கு ஒரு பழைய டூத் பிரஷ் யை எடுத்து அந்த பகுதியில் நன்றாக தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கி அழகான உதடுகளுடன் நீங்கள் வேலைக்கு செல்லலாம்.
அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ் 7:
அடர்ந்த இமை முடிகள் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதற்காக கடைசி நேரத்தில் நீங்க கஷ்டப்பட வேண்டாம். அதற்கு மஸ்காரா போடுவதற்கு முன் இமைமுடிகளில் பேபி பவுடரை அப்ளே செய்து அப்புறம் மஸ்காரா போட்டா அடர்ந்த கருமையான இமைகள் ரெடி.
மேலும் ஐலேஷ் க்கேர்ள்( Eyelash curl) பயன்படுத்தினால் இன்னமும் அழகாகும் உங்கள் கண்கள்.
அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ் 8:
கடைசி நேரத்தில் உங்கள் நகங்களை அழகாக்க நெயில் பெயிண்ட் பண்ணுவது முடியாத காரியம். அப்படியே நீங்கள் செய்தாலும் அது உலர அதிக நேரமாகும்.
இதற்கு தான் உங்கள் நெயில் பெயிண்ட்டில் சில துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து நகத்தில் தடவினால் போதும். ஆலிவ் ஆயில் நெயில் பெயிண்ட் சீக்கிரமாக காய்வதற்கும், அழியாமல் பாலிஷாக இருப்பதற்கும் உதவுகிறது.
இயற்கையான முறையில் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி? (இயற்கை அழகு குறிப்புகள்)..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |