5K Car Care
மனிதனாக பிறந்த அனைவருக்கும் பல கனவுகள் இருக்கும். அதிலும் பலரின் கனவு பொருளாதாரத்தில் சிறந்து நிலையை அடைவது மட்டும் தான். ஆம் மனிதனின் அதிகப்படியான ஆசையாக இருப்பது சமுதாயத்தில் சிறந்த பொருளாதார நிலை. அந்த நிலையை அடைய நமக்கு ஒரு சிறந்த வேலை தேவைப்படுகிறது. பல நாள் தொழிலாளியாக இருந்த ஒருவர் என்றோ ஒருநாள் முதலாளியாக மாற நினைப்பது சாத்தியமே. அப்படி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து முதல் பட்டதாரியான கார்த்திக் குமார் சின்னராஜ், தனக்கான ஒரு தொழிலை ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்று தன்னைப்போல் சாதிக்க துடிக்கும் பலருக்கு உந்துவேகமாக மாறியது மட்டும்மல்லாமல், பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கி மாசற்ற உலகை உருவாக்க அடிக்கோலிட்டுள்ளார். வாருங்கள் இளம்தொழிலதிபரான 5k car care நிறுவனர் கார்த்திக் குமார் சின்னராஜ் பற்றியும் அவர் உருவாக்கிய 5k car care பற்றியும் தெரிந்துகொள்ளவோம்.
5K Car Care Success Story:
கார்த்திக் குமார் சின்னராஜ் ஆரம்ப கால வாழ்க்கை:
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த கார்த்திக், தனது பள்ளி படிப்பை தனது கிராமத்தில் இருந்து தினமும் 12Km தொலைவை மிதிவண்டியில் கடந்து கற்றுள்ளார். தனது கல்லூரி படிப்புக்காக கோவை வந்த அவர். தனது இளநிலை கல்வியை PSG கல்லூரியிலும், தனது MBA முதுநிலை படிப்பை கொங்கு இன்ஜினீரிங் கல்லூரியிலும் முடித்தார்.
வேலைவாய்ப்பு:
தனது வாழ்க்கையை L&T கம்பெனியில் R&D துறையில் ஆரம்பித்த கார்த்திக், அந்த நிறுவனத்தில் இந்திய அளவில் National Traders Award பெற்றுள்ளார். பிறகு asianpaints கம்பெனிலும் உயர்த்த பதிவில் இருந்துள்ளார்.
5k car care உதயம்:
கடந்த சில மாதங்களில் கார் பராமரிப்பு வணிகம் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. மக்கள் பொதுவில் இருந்து தனிப்பட்ட வாகனங்களுக்கு மாறுவதால், பயன்படுத்தப்படும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, எனவே கார் சேவைகளின் தேவை அதிகரித்துள்ளது.
சிறுவயது முதல் சுவாமி விவேகானந்தர், அப்துல் கலாம் ஆகியோரின் புத்தகங்களை படித்து அவர்களில் வழியில் செல்லும் கார்த்திக், ஒரு தொழிலாளியாக மட்டும் இருக்க கூடாது. சமுதாயத்தில் தானும் ஒரு சிறந்த அடையாளமாக மாற வேண்டும் என்ற உந்துவேகத்துடன் காணப்பட்ட கார்த்திக், தனது வேலைகளை துறந்து, 2012-ல் ஜூலை மாதம், வெறும் 3 ஊழியர்களுடன் ஆரம்பித்தது தான் 5K car care.
3 ஊழியர்களுடன் ஆரம்பித்த நிறுவனம் இன்று 3000 அதிகமான ஊழியர்களுடன், 25 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 5K car care பழைய வாகனங்களை புதியது போல் மாற்றுவதே அவர்களின் இலக்கு. அதாவது கார் மெருகூட்டல், சுத்திகரிப்பு, கார் உட்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு மற்றும் டிகார்பனைசேஷன் உட்பட சேவைகளை வழங்குகின்றன.
கோவிட் காலத்தில் இவர்களை சேவை அவர்களுக்கு மேலும் பல வாடிக்கையாளர்களை உருவாக்கி தந்துள்ளது. அதாவது பெரும்தோற்று காலத்தில் காரில் டிரைவர், பயணிகள் மற்றும் சக பயணிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான தனித்துவமான சுத்திகரிப்பு நுட்பங்களை பயன்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.
பெரும்தோற்று கால கட்டத்தில் 2 லட்சம் கார்களை சுத்தம் செய்து, R & D குழுவை உருவாக்கி புதியதாக 450 வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளனர்.
வாகனத்தில் 50% கார்பன் அளவை குறைப்பதே இவர்களின் குறிக்கோள். 2023-ல் தமிழ்நாட்டில் தனது 100 வது கிளையை திறந்து கொண்டாடும். 5k Car Care தனது நிறுவனத்தின் அடுத்த கட்டமாக மலேசிலா, சிங்கப்பூர், துபாயில் தனது கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. 5k Car care நிறுவனம் தனது franchise மூலம் கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளாவிலும் தனது கிளைகளை தொடங்கியுள்ளது.
கார்த்திக் குமார் சின்னராஜின் உறுதி, நம்பிக்கை மட்டுமே அவரை இந்த கொரோனா தொற்று காலத்திலும் சிறந்த சேவையும் பலருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்க உதவியிருக்கிறது.
தனது சொந்த முயற்சி மூலம் அனுபவம் இல்லாத துறையில் சாதித்து காட்டியுள்ளார் கார்த்திக். அவரின் ஊக்கமும் தொடர் முயற்சி மட்டுமே அவரின் இந்த வெற்றிக்கு காரணம்.
சலவை தொழில் ஆரம்பித்த 3 ஆண்டுகளில் 160 நகரங்களில் 600 மையங்கள்….
இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Achievers |