கங்காரு
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் கங்காரு பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளபோகிறோம். கங்காரு என்பது ஒரு விலங்கு இனத்தை சேர்ந்தவையாகும். இந்த கங்காரு ஆனது ஆஸ்திரேலியா மற்றும் அதற்கு அருகில் உள்ள தீவுகளில் அதிகமாக காணப்படும். கங்காருக்களின் தோல்களும், இறைச்சிகளும் புல்வெளிகளின் இழப்பை தடுப்பதற்கு உதவியாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இவற்றை பற்றி சில முக்கியமான சுவாரசியமான விஷயங்களை காணலாம் வாங்க.
நாய்கள் பற்றிய தகவல் |
கங்காரு பற்றிய தகவல்கள்:
கங்காரு பாலூட்டி வயிற்றில் பை பொருத்தப்பட்ட ஒரு இனத்தை சேர்ந்த விலங்காகும். கங்காருகள் பொதுவாகவே கூட்டமாக வாழும் பிராணிகள் ஆகும்.
கங்காருகள் ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விலங்காகவும் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமாக இந்த கங்காருகள் வாழ்ந்து வருகின்றன.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி கங்காருகள் 35 மில்லியன் கங்காருகள் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது.
கங்காருகள் சாப்பிடுவதற்கு புர்கள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கின்றன. இதன் மூலம் ஆஸ்திரேலியா விவசாய துறையில் பெரிய சேதங்களையும் ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
கங்காரு உடல் அமைப்பு:
கங்காருகளின் உடல் அமைப்புகளை பொறுத்தவரை இரு குட்டையான முன் கால்களையும், பெரிய பலமான பின் கால்களையும் கொண்டுள்ளது. அதோடு பெரிய நீண்ட வால்களையும் கொண்டிருக்கும்.
இந்த கங்காரு குட்டிகள் பின் கால்களை வைத்து தாவி இடம்பெயர்கின்றன. இதனுடைய வால் ஆனது இவை நிற்பதற்கு சமநிலை படுத்துகிறது. இவை தாவும் பொழுது 13 மீட்டர் வரைக்கும் தாவும் திறனையும் உடல் அம்சத்தையும் கொண்டது.
கங்காருவில் 10 கங்காருகள் ஒன்று சேரும் பொழுது ஐம்பது கங்காருகலாக இனப்பெருக்கம் ஆகிறது.
கங்காருகள் முழுமையாக வளர்ச்சியடையாத குட்டிகளை பெறுகின்றன. கங்காரு குட்டிகள் பிறக்கும் பொழுது மிகவும் லேசான எடையுடன் பிறக்கின்றன.
தாய் கங்காருகள் தனது குட்டிகளை ஒன்பது மாதங்கள் வரை அதனுடைய பையில் சுமக்கின்றன.
கங்காருகளில் பல வகையான இனங்கள் உள்ளன. அதிலும் சிவப்பு நிறத்தை கொண்ட கங்காருகள் பத்து கிலோ உடல் எடையையும், இரண்டு மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. அதோடு மூன்று அடி உயரம் உள்ள வாலையும் கொண்டுள்ளது.
கங்காருகள் நல்ல வலிமைவாய்ந்த எலும்புகளையும், தசைகளையும் கொண்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இவை அதிகமான தூரங்களுக்கு சென்றாலும் கலைப்படைவதில்லை.
எப்பொழுதும் சுருசுருப்பாக ஓய்வின்றி செல்ல கூடிய உயிரினமாகும். இவை எதிரிகளை தாக்குவதற்கு பின்கால்களை பயன்படுத்துகின்றன. அதேபோல் முன் கால்களில் உள்ள நகங்களையும் எதிரிகளை தாக்குவதற்கு பயன்படுத்துகின்றன.
இந்த கங்காருகள் நான்கு கால்களில் நடக்க முடியவில்லை என்றாலும், நீரில் அழகா நீந்த கூடிய உயிரினமாகும். இதற்கு மோப்ப சக்திகள் அதிகமாகவும் காணப்படுகிறது. கங்காருகள் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும் இனமாகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |