பூனை பற்றிய தகவல்கள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பூனைகள் பற்றிய சில சுவரியமான தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாக நாய் குட்டிகளை வளர்ப்பது போல சில வீடுகளில் பூனை குட்டிகளையும் வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சிலர் வீடுகளில் எலியின் தொல்லை அதிகமாக இருப்பதாலும் பூனையை செல்ல பிராணியாக வளர்த்து வருவார்கள். மேலும் இவற்றை பற்றிய தகவல்களை தொடர்ந்து படித்து அறியலாம் வாங்க.
பாண்டா கரடி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்.! |
பூனைகள் பற்றிய தகவல்கள்:
பூனைகளில் இரண்டு வகைகள் உள்ளன அவை, காட்டு பூனை மற்றும் வீட்டு பூனையாகும். இவை சுத்தமாக இருக்கும் விலங்கு ஆகும். அதனுடைய ரோமங்களை நாக்கை கொண்டு சுத்தம் செய்து கொள்ளும். இவை 12 வருடம் உயிர் வாழும் பிராணியாகும். பூனைகள் அதனுடைய உடல் உயர்த்தை விட அதிகமாக தாவும் திறமையை கொண்டது.
பூனைகள் பொதுவாக ஒரு உணவை ருசிக்கும் பொழுது குறைந்தது மூன்று முறையாவது ருசித்த பிறகு தான் அந்த உணவை சாப்பிட தொடங்கும்.
பூனைகள் முழித்து இருப்பது மிகவும் குறைவுதான், பூனைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 70 % தூங்கியே அந்த நாளை கழித்துவிடும். அதுமட்டுமின்றி தூங்கி எழுந்த பிறகு சோம்பல் எடுத்த பிறகுதான் அந்த இடத்தில் இருந்து நகரசெய்யும்.
பூனைகள் அதனுடைய வியர்வைகளை அதன் உள்ளங்கால் வழியாக வெளியேற்றுகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதோடு இவை இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவை மரபணு மாற்றத்தினால் இழந்துவிட்டது.
இதனுடைய சிறுநீர்கள் இரவில் ஒளிரக்கூடிய தன்மையை கொண்டது. மிகவும் அதிகமாக வேட்டை ஆடக்கூடிய விலங்குகளில் பூனையும் ஒன்றாகும்.
மனிதர்களிடம் எளிதாக பழக கூடிய விலங்கு என்றால் பூனை தான், அதனுடைய தேவைகளை வால்களை ஆட்டி உரசி தெரியப்படுத்தும்.
பூனையின் உடல் அமைப்பு:
பூனைகள் ஒரு சிறியவகை பாலூட்டி விலங்குகள் ஆகும். பூனைகளின் கழுத்திற்கும் தோலுக்கும் இடையே எலும்புகள் கிடையாது. பூனைகள் கண்களில் ஒளியை கொண்டவை, இரவில் இதனுடைய கண்கள் விசித்திரமாக ஒலியுடன் இருக்கும். பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை எடை கொண்டவையாக இருக்கும். பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகளை கொண்டவையாகும். அதுமட்டுமின்றி பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் உள்ளன. இவை அதிகமான இனப்பெருக்கத்தை கொண்டவையாகும்.
இவை முன்னங்கால்களிலில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் பூனைகள் கொண்டுள்ளது. பூனைகள் நடக்கும் பொழுது எந்த விதமான ஓசைகளும் இருக்காது ஏனென்றால் அதனுடைய பாதங்கள் பஞ்சு போன்ற தன்மையை கொண்டவையாகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |