Axis Bank 5 Lakh Business Loan EMI Calculator
ஆக்சிஸ் வங்கி (Axis Bank) என்பது டிசம்பர் 1993 இல் UTI வங்கியாக நிறுவப்பட்டது. இவ்வங்கி மும்பை , மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு இந்திய வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகும் . அதுமட்டுமில்லமால் இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் துறை வங்கியாகும் திகழ்கிறது. இவ்வங்கியில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களையும், சேமிப்பு திட்டங்களையும் வழங்கி வருகிறது. எனவே, அந்த வகையில் இப்பதிவில் ஆக்சிஸ் வங்கியில் வழங்கப்படும் பிசினஸ் லோன் பற்றிய சில விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நாம் அனைவருமே ஏதேவொரு தேவைக்காக வங்கிகளிலோ அல்லது பிற நிறுவங்களிலோ கடன் வாங்குவோம். எனவே, அப்படி நாம் கடன் வாங்குவதற்கு முன்பாக அக்கடனை பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு வாங்க வேண்டும். அதாவது, நாம் கடனிற்கு எவ்வளவு வட்டி.? மாதம் EMI எவ்வளவு கட்ட வேண்டும்.? கடனிற்காக கால அளவு எவ்வளவு என்பதை தெரிந்துகொள்வது அவசியம். எனவே, அந்த வகையில் இப்பதிவில் ஆக்சிஸ் வங்கியில் வழங்கப்படும் பிசினஸ் லோனிற்கு எவ்வளவு வட்டி.? EMI எவ்வளவு.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Axis Bank 5 Lakh Loan Interest Rate in Tamil:
வட்டி விகிதம்:
ஆக்சிஸ் வங்கியில் பிசினஸ் லோனிற்கான வட்டி விகிதமாக 10.75% அளிக்கப்படுகிறது.
கடன் தொகை:
ஆக்சிஸ் வங்கியில் நீங்கள் ஒவ்வொருவருடைய தகுதியினை பொறுத்து அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பிசினஸ் லோன் வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
ஆக்சிஸ் வங்கியில் நீங்கள் வாங்கிய பிசினஸ் லோனை அதிகபட்சம் 15 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.
EMI மற்றும் வட்டி தொகை:
உதாரணமாக, நீங்கள் ஆக்சிஸ் வங்கியில் 5 வருட கால அளவை தேர்வு செய்து 5 லட்சம் கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதமாக 10.75% அளிக்கப்படுகிறது.
எனவே, இந்த வட்டி தொகையை வைத்து கணக்கிடும்போது, நீங்கள் மாத 10,808 ரூபாய் செலுத்தி வர வேண்டும்.
இந்த 5 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகையாக 1,48,538 ரூபாய் செலுத்த வேண்டும். ஆகவே நீங்கள் வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தமாக 6,48,538 ரூபாய் செலுத்த வேண்டும்.
அசல் தொகை +வட்டித்தொகை = ரூ.5,00,000 + ரூ.1,48,538 =ரூ. 6,48,538
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI தொகை மாறுபடும்.
👉ஆக்சிஸ் வங்கியில் வீட்டு கடன் 3 லட்சம் வாங்கினால் வட்டி எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |