AXIS GOLD LOAN
அனைவரும் எதனால் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டுகிறோம் தெரியுமா..! இதற்கு நிறைய காரணம் உள்ளது..! முதல் காரணம் நம்முடைய பொருளாதார நெருக்கடியான காலத்தில் நமக்கு உதவியாக நமது தங்கம் இருக்கும் என்பதற்காகவும், தங்கத்தின் மதிப்பும் எப்போதும் உயர்ந்துகொண்டே இருக்கும் என்ற காரணத்தினாலும் தங்கத்தின் மீது நம்முடைய கவனம் அதிகமாக இருக்கின்றது. ஆம். தங்கம் ஒரு நல்ல சேமிப்பாக இருக்கும் என்பதற்காகவும் தான் அதில் முதலீடு பலர் செய்கிறார்கள். நமது தங்கம் எப்போதும் நமக்கு ஒரு முதலீடாகவே இருக்கும். நீங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து உங்களில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கின்றிர்கள் என்றால், Axis வங்கியில் வைக்கும் நகைக்கு வட்டி எவ்வளவு வரும். அதனை எவ்வளவு மாதம் செலுத்தி நமது நகையை மீட்பது என்று எந்த பதிவில் முழுமையாக பார்ப்போம் வாருங்கள்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
AXIS – யின் நகை கடன் விவரங்கள்:
AXIS வங்கியில் நகை கடன் வாங்க 18 வயது முதல் 75 வயது பூர்த்தியடைந்த தனிநபர் வாங்கலாம்.
AXIS வங்கியில் நகை கடனுக்கான தொகை குறைந்த பட்சம் 25,001 முதல் 25லட்சம் வரை வழங்கப்படுகிறது.
கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு 3 வருடம். கடன் ஒரு வருடத்தை கடக்கும் போது கடனை புதுப்பிப்பது அவசியம்.
நகை கடன் வாங்கும் போது நமது தொகையில் 0.5 % மற்றும் GST செயலாக்க கடனாக வசூலிக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
- கடன்வாங்குவரின் சாட்சி கடிதம்
- முகவரிக்கான அடையாள சான்று
- போட்டோ
வட்டி விகிதங்கள்:
AXIS வங்கியில் நகைக்கடனுக்கான வட்டிவிகிதம் 13.50 % முதல் 14.50 % வரை வட்டி விதிக்கப்படுகிறது.
5 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு:
எடுத்துக்காட்டாக..
நீங்கள் AXIS வங்கியில் 16 கிராம் 22கேரட் நகை வைத்து கடன் பெறுகின்றிர்கள் என்றால், அந்த நகையின் மதிப்பு 82,964 ரூபாய் ஆகும். வங்கி உங்களுக்கு 62,223 ரூபாய் கடனாக வழங்கும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |