IDFC Bank Fd Interest Rates Calculator in Tamil
இன்றைய சூழலில் பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை என்பது தான் கசப்பான உண்மை. அதனால் அனைவருமே தங்களிடம் அதிக அளவு பணத்தை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வத்தையும் கொண்டுள்ளார்கள். அதனால் அனைவரும் ஓடி ஓடி கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிக்கிறார்கள். அப்படியெல்லாம் சம்பாதித்தும் எந்த ஒரு பயனும் இல்லாமல் தான் போகின்றது. ஏனென்றால் நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதனை நாம் எப்படி சேமிக்கின்றோம் என்பதில் தான் உள்ளது. இன்றும் ஒரு சிலருக்கு நாம் எவ்வாறு சேமித்தால் நமக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பதில் குழப்பம் உள்ளது. அதனால் தான் இன்று IDFC வங்கியின் FD திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து IDFC வங்கியின் FD திட்டத்தில் எப்படி சேமிப்பது எவ்வளவு சேமித்தால் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ளுவோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IDFC Bank Fd Details in Tamil:
தகுதி:
இந்த IDFC Bank FD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
சேமிப்பு தொகை:
இந்த FD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 10,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 கோடி வரை செலுத்தலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை சேமிக்கலாம்.
IDFC வங்கியில் தங்க நகையை வைத்து 1.5 லட்சம் கடன் வாங்கினால் 2 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு
வட்டி விகிதம்:
காலம் | ஜென்ட்ரல் சிட்டிசன் | சீனியர் சிட்டிசன் |
7-14 நாட்கள் | 3.00% | 3.50% |
15 – 29 நாட்கள் | 3.00% | 3.50% |
30 – 45 நாட்கள் | 3.00% | 3.50% |
46 – 90 நாட்கள் | 4.50% | 5.00% |
91 – 180 நாட்கள் | 4.50% | 5.00% |
181 நாட்கள் – 1 வருடத்திற்கும் குறைவானது | 5.75% | 6.25% |
1 ஆண்டு | 6.50% | 7.00% |
1 வருடம் 1 நாள் – 2 ஆண்டுகள் | 7.50% | 8.00% |
2 ஆண்டுகள் 1 நாள் – 749 நாட்கள் | 7.25% | 7.75% |
750 நாட்கள் | 7.25% | 7.75% |
751 நாட்கள் – 3 ஆண்டுகள் | 7.25% | 7.75% |
3 ஆண்டுகள் 1 நாள் – 5 ஆண்டுகள் | 7.00% | 7.50% |
5 வருடம் 1 நாள் – 10 ஆண்டுகள் | 7.00% | 7.50% |
உதாரணமாக:
ஜென்ட்ரல் சிட்டிசன்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | முதிர்வு தொகை |
10,000 | 5 வருடம் | Rs. 4,148 | Rs. 14,148 |
சீனியர் சிட்டிசன்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | முதிர்வு தொகை |
10,000 | 5 வருடம் | Rs. 4,499 | Rs. 14,499 |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |