Indian Overseas Bank Spl FD interest rates
இந்தியன் ஓவர்சீசு வங்கி இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். நரேந்திரா ஆவார். இந்த வங்கியில் தற்பொழுது ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்திற்கு கால அளவு வெறும் 444 நாட்கள் மட்டுமே. சரி இந்த திட்டம் குறித்த விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IOB 444 days FD interest rate
IOB-யின் 444 நாட்களுக்கான ஸ்பெஷல் டெபாசிட் முதலீட்டு திட்டம் நவம்பர் 15-ஆம் தேதியில் மீண்டும் ரிவைஸ் செய்துள்ளனர்.
இந்த முதலீட்டு திட்டத்தின் முறைந்தபட்ச டெபாசிட் தொகை 1000 ரூபாய் ஆகும். அதிகபட்சமாக நீங்கள் 2 கோடிக்கும் கீழ் நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த முதலீட்டு திட்டத்தில் 0.50% அதிகமாக வட்டி வழங்குகின்றன. அதேபோல் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 0.75% அதிமாக கிடைக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ICICI வங்கியில் 2 லட்சம் கோல்டு லோன் பெற்றால் 1 ஒரு வருடத்திற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..?
வட்டி:
- பொது மக்களுக்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது.
- 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7.60% வழங்கப்படுகிறது.
- 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7.85% வழங்கப்படுகிறது.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்:
முதலீட்டு தொகை | பொது மக்கள் | 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு | 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு |
5,000 | 446 | 479 | 495 |
25,000 | 2,234 | 2,397 | 2,479 |
50,000 | 4,469 | 4,795 | 4,959 |
1,00,000 | 8,938 | 9,590 | 9,918 |
3,00,000 | 26,814 | 28,772 | 29,754 |
6,00,000 | 53,628 | 57,543 | 59,508 |
9,00,000 | 80,442 | 86,315 | 89,263 |
15,00,000 | 1,34,071 | 1,43,859 | 1,48,771 |
இந்த வட்டியை உங்கள் மெச்சுரிட்டி காலம் முடிந்த பிறகும் வாங்கிக்கொள்ளலாம், அதேபோக் மாதம் மாதம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போன்ற கால கட்டத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
8 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி மட்டும் எவ்வளவு..?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |