வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?

Updated On: February 17, 2025 7:25 PM
Follow Us:
SBI RD Interest Rates 2023 For 1 Year in Tamil
---Advertisement---
Advertisement

SBI RD Interest Rates 2025 For 1 Year in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் SBI வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாக திகழும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மக்களுக்கு பல வகையான சேமிப்பு திட்டங்களையும் கடன்களையும் வழங்கி வருகிறது. எனவே SBI வங்கி வழங்கக்கூடிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றான RD சேமிப்பு திட்டத்தினை பற்றிய சில விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

அதாவது நீங்கள் ஒரு பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக இருந்து RD சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தீர்கள் என்றால் அதற்கான வட்டி எவ்வளவு..? குறைந்தபட்சம் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்..? போன்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

SBI 1 Year RD Interest Rate in Tamil:

SBI 1 Year RD Interest Rate in Tamil

டெபாசிட் தொகை:

SBI வங்கியின் RD திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

கால அளவு:

SBI வங்கியின் RD திட்டத்தில் நீங்கள் 1 வருடம் முதல் 10 வருடம் வரையிலான கால அளவை தேர்வு செய்து டெபாசிட் செய்யலாம்.

வட்டி விகிதம்:

கால அளவு  ஜென்ரல் சிட்டிசன்  சீனியர் சிட்டிசன் 
1 வருடம் முதல் 1 வருடம் 364 நாட்கள் வரை  6.80% 7.30%
2 வருடம் முதல் 2 வருடம் 364 நாட்கள் வரை  7.00% 7.50%
3 வருடம் முதல் 4 வருடம் 364 நாட்கள் வரை  6.50% 7.00%
5 வருடம் முதல் 10 வருடம் வரை  6.50% 7.00%

உதாரணமாக:

நீங்கள் SBI வங்கியின் RD திட்டத்தில் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 6.80% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

எனவே 6.80% வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது 1 வருடத்தில் உங்களுக்கு மொத்த வட்டி தொகையாக 899 ரூபாய் வழங்கபடுகிறது. எனவே நீங்கள் 1 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டித்தொகை சேர்த்து மொத்தமாக 24,899 ரூபாயினை பெறுவீர்கள்.

சீனியர் சிட்டிசன் வட்டி தொகை:

அதுவே நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசனாக இருந்து, SBI வங்கியின் RD திட்டத்தில் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 7.30% வட்டி விகிதம் வழங்கபடுகிறது.

எனவே 7.30% வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது 1 வருடத்தில் உங்களுக்கு மொத்த வட்டி தொகையாக 965 ரூபாய் வழங்கபடுகிறது. எனவே நீங்கள் 1 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டித்தொகை சேர்த்து மொத்தமாக 24,965 ரூபாயினை பெறுவீர்கள்.

அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி.?

  • SBI வங்கியில் Online மற்றும் Offline மூலம் RD அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம்.
  • நீங்கள் Offline மூலம் RD அக்கவுண்ட் ஓபன் செய்ய விரும்பினால் அருகில் உள்ள SBI வங்கியை அணுகி, தேவையான சான்றிதழ்களை கொடுத்து ஓபன் செய்து கொள்ளலாம்.
  • Online மூலம் RD அக்கவுண்ட் ஓபன் செய்ய விரும்பினால் நெட் பேங்கிங் மூலம் ஓபன் செய்து கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?