Best Books for Python Beginners to Advanced
புத்தகம் படிக்கும் பழக்கம் ஆனது நிறைய மனிதர்களிடம் இருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் படிக்கும் புத்தகமானது ஒரே மாதிரியாகவோ அல்லது ஒரே புத்தகமாகவோ இருப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழக்க வழக்கம் இருக்கும். அந்த வகையில் சிலருக்கு கணினி பற்றிய புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதில் கடல் போல் எண்ணற்ற புத்தகங்கள் இருப்பதால் அவற்றில் எதை படிப்பது என்று குழப்பம் இருக்கும். அதனால் தான் இன்றைய Books பதிவில் சிறந்த Python புத்தகங்களை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகவே இந்த பதிவானது உங்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும். அதனால் பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👉 https://bit.ly/3Bfc0Gl
சிறந்த பைத்தான் புத்தகம்:
Learn Python 3 the Hard Way:
இந்த Learn Python 3 the Hard Way என்ற புத்தகத்தை Zed A. Shaw என்பவர் பைத்தானில் நாம் மிகவும் எளிமையாக தீர்வுகளை பெறுவதற்காக சுருக்கி வடிவமைதியுள்ளார். பைத்தான் பற்றிய எந்த விதமான அனுபமும் இல்லாதவர்களுக்கு இந்த புத்தகம் ஆனது சிறந்த ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
Head First Python:
பால் பாரி என்ற ஆசிரியர் தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நாம் கணினி மையமாக வைத்து கைகளால் செய்யக்கூடிய அனைத்தினையும் எளிமையாக பைத்தான் ஹெட் ஃபர்ஸ்ட் மூலம் எப்படி செய்வது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தரவுத்தள மேலாண்மை, விதிவிலக்கு கையாளுதல் இதர அனைத்தினையும் இந்த புத்தகம் வாயிலாக கற்றுகொள்ளலாம்.
Programming Python: Powerful Object-Oriented Programming (4th Edition):
பைத்தானில் உள்ள இத்தகைய புத்தகத்தின் வாயிலாக கணினியில் உள்ள வலை பயன்பாடுகள், நெட்வொர்க்கிங், GUI மற்றும் தரவுத்தளங்கள் ஆகியவற்றையின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.
அதுமட்டும் இல்லாமல் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள எடுத்துக்காட்டுகள் மற்றும் பொருளானது அடிப்படையில் எதுவுமே தெரியாத ஒரு நபருக்கும் எளிமையாக இருக்கும். மார்க் லூட்ஸ் என்பவரே இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆவர்.
கம்பெனியை நடத்துவதற்கு சிறந்த புத்தகங்கள் |
Python Crash Course – 2nd Edition:
இந்த புத்தகத்ததில் உள்ள இரண்டு பாகங்களும் பைத்தான் மொழியினை பற்றிய முழு தகவலையும் விரிவாகவும், நமக்கு புரியும் வகையிலும் தொகுத்து கூறியிருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் புத்தகத்தின் வாயிலாக பைகேம், மேட்ப்ளாட்லிப், ப்ளாட்லி மற்றும் ஜாங்கோ என இவை அனைத்தினையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சிறந்த புத்தகத்தை எரிக் மேத்ஸ் என்பவரே எழுதியுள்ளார்.
Elements of Programming Interviews in Python:
சாதாரணமாக பைத்தானில் நமக்கு ஏற்படும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த புத்தகம் ஆனது இடம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த புத்தகத்தில் சுமார் 250 Solution Programming, 200 Diagram ஆகியவையும் மேலும் சில விளக்கமும் இதில் உள்ளது.
நமக்கு ஆரம்ப நிலை முதல் பைத்தான் கற்று முடித்த பிறகு வரும் அனைத்து தகவலுக்கும் பயனளிக்கும் விதமாக இது இடம் பெற்றுகிறது. இத்தனை சிறப்புகளை கொண்டுள்ள இந்த புத்தகம் ஆனது சுங்-சியென், அட்னான் மற்றும் அமித் என்ற மூவரால் எழுத்துப்பட்டுள்ளது.
மேலே சொல்லப்பட்டுள்ள புத்தகம் இல்லாமல் வேறு சில புத்தகமும் இதில் காணப்படுகிறது. அதுபோல் மேலே கூறியுள்ள புத்தகம் அனைத்தும் பைத்தான் புதிதாக படிக்க விரும்பும் மற்றும் அதற்கும் மேலாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த புத்தகம் ஆகும்.
ஜாவா (Java) டெவலப்பர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்
இதுபோன்ற புத்தகங்களை பற்றி தெரிந்துகொள்ள | Books |