Florist Shop Business Plan
பொதுவாக இயற்கையாக தயாரிக்கப்படும் பொக்கே பூ ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. எனவே நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கக்கூடிய செயற்கை பூ பொக்கே தயார்செய்யலாம். செயற்கை பூ பொக்கேக்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. எனவே செயற்கை பூ பொக்கே (florist shop business plan) தயார் செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம்.
செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேயை யார் வேண்டுமானாலும் எளிதாக தயார் செய்யலாம். மேலும் காதலர் தினம். திருமண வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளில் செயற்கை பொக்கே பூ அதிகம் பயன்படுகிறது. எனவே அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக காதலர் தினத்திற்கு சிவப்பு ரோஜாக்களும், நண்பர்கள் தினத்திற்கு பிங்க் ரோஜா பொக்கேகளை அதிகம் வாங்குகின்றனர். எனவே அந்த தினங்களுக்கு ஏற்ப பொக்கேகளை தயாரித்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் அதிக வருமானமும் பெறலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பொக்கே வியாபாரம் தொடங்கும் முன் செய்ய வேண்டியவை:
இடம்:
நீங்கள் உங்கள் பொக்கே ஷாப் அமைக்கும் இடம் மக்கள் அதிகம் கூடும் இடமாகவும். நகரத்தின் மையத்தில் இருப்பது போன்றும் அமைப்பது நல்லது.
அமைப்பு:
நீங்கள் உங்கள் கடையை மக்கள் விரும்பும் வண்ணம் வெளித்தோற்றத்தை அமைக்க வேண்டும். எப்போதும் காற்றோட்டமான இருப்பிடமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
பொக்கே தயாரிக்கும் முறை:
பொக்கே கோன், பூ ஆகியவற்றை தனித்தனியாக தயாரிக்க வேண்டும்.
ராப்பரை முக்கால் அடி உயரம், ஒன்றரை இஞ்ச் திறப்பு உள்ளவாறு சுற்றினால் கோன் தயார்.
பூ தயாரிக்க முதலில் இதழ் தயாரிக்க வேண்டும், பின் அவற்றை பூவாக மாற்ற வேண்டும்.
ஒரு பூவுக்கு 7 இதழ்கள் தேவை. இதழ் தயாரிக்க ஆர்கன்டி துணியில் ஒன்றே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 2 இஞ்ச் அளவில் 1 துண்டு, இரண்டரை இஞ்ச் அளவில் 2 துண்டு, இரண்டே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 3 இஞ்ச் அளவில் 2 துண்டு என மொத்த 7 துண்டுகளை வெட்டி கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மடித்து இதழாக மாற்ற வேண்டும்.
இதழ் செய்ய, முதலில் ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக துண்டின் வலது, இடது புற முனைகள் தொடும் வகையில் மடிக்க வேண்டும்.
பின்னர் கீழ், மேல் முனைகள் இணையும் வகையில் மடிக்க வேண்டும்.
பின்னர் அதை சமமாக இடது, வலதாக மடிக்க வேண்டும்.
இரு முனைகளையும் வெளிப்புறமாக மடிக்க வேண்டும்.
இப்போது சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு அளவுகளில் தனித்தனி இதழ்கள் தயாராகும்.
பூ தயாரிக்க, முதலில் 5 இஞ்ச் நீளமுள்ள கம்பியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேல் பகுதியை கொக்கி போல் வளைத்து, சிறிய இதழை அதில் செருக வேண்டும், பின்னர் அடுத்தடுத்த இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றியும் வைத்து, ஒவ்வொரு இதழுக்கும் பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். 7 இதழ்களையும் கட்டி முடித்தால் பூ தயாராகும்.
பூவின் கீழ் பகுதி முதல் கம்பி முழுவதும் கிரீன் பேப்பர் அல்லது டேப்பால் சுற்றினால் கம்பி பச்சை நிற காம்பாக தோற்றமளிக்கும்.
காம்போடு கூடிய முழுமையான பூ தயாராகும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பொக்கே கோனில் கிரீன் கிராப்பை கொத்தாக சொருகி, அதன் மேல் பூவை சொருகினால் செயற்கை ரோஸ் சிங்கிள் பொக்கே பூ ரெடி.
பொக்கே பூ தயாரிப்பு வருவாய் மாதத்திற்கு:
பொக்கே தயாரிப்பு ஒரு செயற்கை பொக்கேவை மொத்த விற்பனை விலையாக கடைகளுக்கு சுமார் ரூ.20/- வீதம் விற்கலாம். இதன் மூலம் வருவாய் ரூ.16,000/-
உற்பத்தி செலவு போக லாபம் ரூ.9,600/- சில்லரையாக ரூ.25/-க்கு விற்கலாம். இவ்வாறு விற்றால் லாபம் கூடும். பெரிய பூக்களை செய்து, கொத்தாக உருவாக்கி, அதை வண்ணம் தீட்டப்பட்ட பொக்கே பூ ஸ்டாண்ட்களில் சொருகி ‘பிளவர் வாஷ்’ தயாரித்து விற்கலாம். அதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |