Eligibility For Open An Account in SBI Bank
வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தவகல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நாம் இன்று State Bank இல் Account திறக்க வேண்டும் என்றால் என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..! |
SBI Bank Account Open Eligibility in Tamil:
குடியுரிமை பெற்ற தனிநபர்கள், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் ஆகியோர் SBI வங்கியில் தனி அல்லது கூட்டுக் கணக்கைத் தொடங்க தகுதியுடையவர்கள் ஆவர்.அதுபோல SBI வங்கியில் எந்த வயதினரும் அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வங்கி கணக்கை தொடங்கலாம். சிறியவர்களின் பெயரில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கூட்டாக வங்கி கணக்கை தொடங்கலாம்.
SBI வங்கியில் கணக்கு தொடங்க எவ்வளவு தொகை இருக்க வேண்டும்..?
அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும். வங்கி கணக்கை திறக்க எவ்வளவு தொகை இருக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கும். ஆனால் SBI வங்கியில் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கை பூஜ்ஜிய இருப்புடன் திறக்கலாம்.
வீட்டு கடன் என்றால் என்ன..? SBI -இல் என்ன வகையான வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன..! |
SBI வங்கியில் ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்கு வைத்திருக்கலாமா..?
ஒரு நபர் SBI வங்கியில் ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கலாம். ஆனால் அதே வாடிக்கையாளர் ஐடியுடன் அனைத்து கணக்குகளும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.
SBI இல் கணக்கு திறக்க என்ன ஆவணங்கள் தேவை:
- ஆதார் கார்டு,
- பாஸ்போர்ட்,
- ஓட்டுநர் உரிமம்,
- வாக்காளர் அடையாள அட்டை
- பான் கார்டு
- 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |