பெண் குழந்தை பாடல் வரிகள் | Daughter Songs in Tamil..!
நம்முடைய வீடுகளில் ஒரு பெண் குழந்தை பிறந்தது என்றால் நமக்கு வீட்டிற்கு மஹாலஷ்மியே வந்து பிறந்து இருக்கிறது என்று கூறுவார்கள். அதோடு மட்டும் இல்லாமல் ஆண் குழந்தைகளை விட ஒரு படி மேலாக வீட்டில் உள்ள அப்பாக்கள் பெண் குழந்தைகளின் மீது பாசம் வைத்து வளர்த்து வருவார்கள். இவ்வாறு எது நல்லது, எது கேட்டது என்று பார்த்து பார்த்து செய்து வளர்த்து வரும் பெண் குழந்தைகள் திருமணம் முடிந்த பிறகு மற்றொரு வீட்டிற்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்னமும் கண் கலங்கிய நிலையில் தான் வலி அனுப்பி வைக்கும் போது இருக்கிறார்கள். அம்மா என்ன தான் 10 மாதம் வயிற்றில் பெற்று எடுத்தாலும் கூட அதிகமான பாசத்தினை பெண் குழந்தைகளின் மீது வைப்பது அப்பா என்ற உறவு மட்டுமே..! அதனால் இன்று அப்பா மகள் உறவுகளுக்கான சினிமா பாடல் வரிகளை தான் பார்க்கப்போகிறோம்.
எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள்
ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்:
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில்
தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்தா பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோவில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
மேலும் சில தகவல்கள்:
- படத்தின் பெயர்: தங்கமீன்கள்
- பாடகர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
- இசை அமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
- பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
- படம் வெளிவந்த ஆண்டு: ஆகஸ்ட் 30 2013
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |