சூர்யாவின் 42-வது படத்தின் டைட்டில் கங்குவா இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

Advertisement

சூர்யாவின் 42-வது படத்தின் டைட்டில் கங்குவா இதன் அர்த்தம் என்ன தெரியுமா? – Kanguva Meaning in Tamil

நடிகர் சூர்யா அவர்கள் விஸ்வாசம் இயக்குனர் சிவா இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நடிகர் சூர்யா நடிக்கும் 42-வது படம் ஆகும். இந்த படத்தின் ஸ்டுடியோ ஸ்கிரீனை ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி ஜோடியாக நடிக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் ஐந்து வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். மேலும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வீடியோவை ஏப்ரல் 16-ஆம் தேதி அன்று வெளியிட்டனர். இந்த படத்தின் டைட்டில் என்னவென்றால் கங்குவா ஆகும். இந்த படத்தின் டைட்டிலுக்கான அர்த்தம் என்ன என்று இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

சூர்யாவின் 42-வது படத்தின் டைட்டில் கங்குவா இதன் அர்த்தம் என்ன தெரியுமா?kanguva

kanguva meaning in tamil – நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் கங்குவா ஆகும். இது ஒரு வித்தியாசமான தமிழ் வார்த்தை என்று இயக்குனர் தெரிவித்தார். “கங்குவன் என்பது மொழியில் ஒரு பெயர். உண்மையில், படத்தின் போஸ்டரில் தலைப்புக்கு மேலே நாம் பயன்படுத்திய ஸ்கிரிப்ட் வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழாகும், இது 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது மற்றும் அந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியது. கங்கு என்றால் நெருப்பு. எனவே, கங்குவா என்பது நெருப்பு ஆற்றல் கொண்ட மனிதனைக் குறிக்கிறது” என்று விளக்குகிறார்.

இந்த தலைப்பை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது குறித்து அவர் கூறுகையில், “படத்தை 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், இப்படத்தில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நினைத்தோம். என்று தெரிவித்தார் இயக்குனர் சிவா” மேலும் இந்த படம் தற்பொழுது 50 சதவீதம் படப்பிடிப்பை குழுவினர் முடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Pothunalam.com
Advertisement