செப்டம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

Advertisement

ஓடிடியில் வெளியாகும் படங்கள்

ஹாய் நண்பர்களே சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..! சினிமா ரசிகர்கள் அனைவரும் புதியதாக  படம் ரீலிஸ் ஆக போகிறது என்றால் அது அவர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் படங்களும் அதிகம் ரீரிலீஸாகவும் இல்லை படங்களும் பார்க்கவில்லை. அதன் பின் தளர்வுகள் குறைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக படம் பார்க்க ஆரம்பித்தாலும் அதிக படங்ககளை ஓடிடியில்   வெளியாகி வருகின்றன இதுவும் நமக்கு இன்னும் சவுகரியங்களை கொடுத்துவிட்டது. பிடித்த படங்களை எப்போது வேண்டுமானாலும் அலைந்து பார்க்காமல் வீட்டிலேயே பார்த்துக்கொள்கிறோம். அந்த வகையில் சராமரியாக படங்கள் படங்கள் வெளியாக உள்ளது அது என்னென்ன படங்கள் என்று தெரிந்துகொள்வோம்..!

Ott Release Movies List 2022 Tamil:

மை டியர் பூதம்

விக்ராந்த் ரோணா

kathputli movie

காட்டேரி

மை டியர் பூதம் திரைப்படம்:

மை டியர் பூதம் திரைப்படம்

இந்த படத்தில் பிரபுதேவா, இமான் அண்ணாச்சி, ரம்யா அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன் போன்ற பலர் நடித்துள்ளார் இந்த படம் குழந்தைகளுக்கு பிடித்தபடமாக ஜூலை 15 நாள்  வெளிவந்தது. வெளிவந்த கொஞ்ச நாட்களில் ரசிர்கர்களிடையே ஏற்ற இறக்கத்துடன் அவர்களின் விமர்சங்களை எடுத்துவைத்தனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மஞ்ச பை, கடம்பன் போன்ற படங்களை இயக்கிய என். ராகவன் இயக்கியுள்ளார். இப்படம் நாளை அதாவது செப்டம்பர் 2 தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

விக்ராந்த் ரோணா:

விக்ராந்த் ரோணா

கிச்சா சுதீப் நடித்து கன்னடத்தில் வெளியான படம் விக்ராந்த் ரோணா இந்த படம் கடந்த ஜூலை 28 தேதி திரையரங்குகளில் வெளியானது.  அனூப் பண்டாரி இந்த படத்தை 95 கோடி பஜெட்டில் உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நீரூப் பண்டாரி, நீதா அசோக், மதுசூதன் ராவ், ரவிசங்கர் கவுடா போன்றவர்கள் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் Pan India படமாக வெளியான திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 2 தேதி வெளியாக உள்ளது.

Cuttputlli:

CuttputllI

ரக்ஷா பந்தனை முன்னிட்டு வெளிவந்த படம் கட்புலி. இந்த படத்தில் பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இவர் இந்த படத்தில் போலீஸ்காரராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரகுல்பிரீத் சிங் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் (Hotstar) ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

காட்டேரி:

காட்டேரி

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக படம் காட்டேரி இந்த படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார் அதுபோல் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், ‘லொள்ளு சபா’ மனோகர், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். இப்போது இந்த படமானது செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்கியவர் டீகே ஆவார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement