வெற்றி இயக்குனர்களின் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் இந்த படங்கள்

Advertisement

வெளியாக இருக்கும் படங்கள்..!

நண்பர்களே வணக்கம் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரே ஆர்வமாக இருப்பீர்கள். அடுத்து என்ன படம் வெளியாக இருக்கும் அதனை எப்போது சென்று பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக இருப்பீர்கள். சாதாரணமாக வெளியாக உள்ள படத்துக்கே எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் நமக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள் படம் வெளியாக உள்ளது என்றால் எவ்வளவு ஆசையாகவும் ஆர்வமாகவும் இருப்பீர்கள். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு விதமாக ரசனைகள் இருக்கும் அப்படி உள்ளவர்களின் படங்கள் எப்படி இருக்கும்…! அவர்கள் படங்கள் இயக்கி வருகிறார்கள் என்ற செய்தி வெளி வந்தாலே அந்த படத்தை எப்போது பார்க்க போகிறோம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். வாங்க ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு மிகவும் பிடித்த வெற்றியை தட்டி செய்ய வரிசை கட்டி வெளியாக இருக்கும் படங்களை பற்றி பார்ப்போம்.

எண்ணித் துணிக:

எண்ணித் துணிக

நடிகர் = ஜெய்

நடிகை = அதுல்யா ரவி

வில்லன் = வம்சி கிருஷ்ணா

மற்றும் நமக்கு பிடித்த சுவாரசியமாக கதாபாத்திரகளுடன் நடிக்கும் ஆக்சன் படமாக இருக்கும் எண்ணித்துணிக. இந்த படத்தை எஸ்.கே.வெற்றி செல்வன் படத்தை அவரே எழுத்தி அவரே இயக்குகிறார். இந்த படத்துக்கு இசை அமைப்பவர் சாம் சிஎஸ் ஆவர். இந்த படமானது திரைக்கு ஆகஸ்ட் 4 தேதி வெளியாக உள்ளததாக தெரிவித்துள்ளார்கள்.

காட்டேரி படம்: 

காட்டேரி படம்

நடிகர் = வைபவ்

நடிகை = ஆத்மிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார்.

யாமிருக்கபயமேன் படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும் எவ்வளவு வாய்விட்டு சிரித்து இருப்பீர்கள் என்று. அத்த படத்தை இயக்கிய டீகே இந்த படத்தை இயக்குகிறார். மறுமுறையும் சிரிக்க ரெடியாக இருங்கள். எந்தளவு சிரித்தீர்களோ அதேபோல் படம் முழுவதும்  த்ரில்லர் இருக்கும். இந்த படமானது ஆகஸ்ட் 05 தேதி வெளியாக உள்ளது.

குருதி ஆட்டம் ரிலீஸ் தேதி:

குருதி ஆட்டம் ரிலீஸ் தேதி

இந்த படமானது 8 தோட்டாக்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த படம் முழுவதும் திரில்லர் படமாக இருக்கும் இதில் நடிகராக அதர்வா நடிகை பிரியா பவானி சங்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். குருதி ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக உள்ளது இசை தான். படத்துக்கு இசை அமைப்பது யுவன் சங்கர் ராஜா. கடந்த சில ஆண்டாக படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 05 தேதி வெளியாக உள்ளது. அந்த தேதிகளில் இரண்டு திரில்லர் படம் வெளியாக போகிறது ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

டைரி திரைப்படம்:

டைரி திரைப்படம்

இந்த படத்தில் நடிகராக அருளாக நிதி நடித்திருக்கிறார். நடிகையாக பவித்திர நடித்திருக்கிறார். இந்த படம் க்ரைம் த்ரில்லர்  படமாக இருக்கும் என்று அறிவித்துள்ளார் படத்தை இயக்கிய இன்னசி பாண்டியன். படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 தேதி ஆகும்.

யசோதா படம்:

யசோதா படம்

யசோதா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகைகளில் முன்னிலையில் உள்ள சமந்தா நடிக்கிறார். இந்த அப்படத்தை அறிமுக இயக்குனர்களான ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாக்கப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது ஆகஸ்ட் 12 தேதி.  சினிமா ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

திருச்சிற்றம்பலம் திரைப்படம்:

திருச்சிற்றம்பலம்

நீண்ட நாட்களுக்கு பிறகு அனிருத் தனுஷ் இணைந்து இருக்கும் படமானது திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் குடும்பத்தை மையப்படுத்தி உருவான கதையில் தனுஷ் நடித்திருக்கிறார் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் போன்ற மூன்று கதாநாயகிகள் அதுமட்டுமில்லாமல் பாரதி ராஜா படத்தில் நடித்திருக்கிறார். பாரதி ராஜா நடிக்கிறார் என்றால் சுவாரசியமான கதாபாத்திரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பிசாசு 2 ரிலீஸ் தேதி:

பிசாசு 2

முதலில் வெளியான பிசாசு படத்தில் வெற்றியை கண்ட மிஷ்கின் இப்போது அதனுடைய இரண்டாவது பாகத்தையும் அவரே தொடர்ந்து இயக்கி முடித்தார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்குமார் பிச்சுமணி, ஆண்ட்ரியா, பூர்ணா நடித்துள்ளார். படத்தின் முதல் பாகமே அடுத்து என்ன நடக்கு என்ற எதிர்பார்ப்பில் படம் முழுவதுமே இருக்கும். இப்போது பாகம் 2  எப்படி இருக்கும் என்ன எதிர் பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வாமாக வேட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த படம் வரும் ஆகஸ்ட் 31 தேதி வெளியாக உள்ளது.

விருமன் படம்:

விருமன் படம்

தொடர்ந்து கிராமத்து கதைகளை இயக்கியக்கி அதில் தடம் பதித்த முத்தையா இப்போது விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார் இதில் ஹீரோவாக கார்த்தியும் ஹீரோனினாக தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனரான சங்கர் அவரின் இளைய மகள் அதிதி இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் எப்படி இருக்கும் எண்ணற்ற எதிர்பார்ப்பில் ஆகஸ்ட் 31 தேதி வரை ரசிகர்கள் காத்திருக்கவேண்டும்.

பொம்மை படம்:

பொம்மை படம்

சைக்கோ த்ரில்லர் படத்தை கொடுத்த ராதாமோகன் இப்போது பொம்மை என்ற படத்தை இயக்கியுள்ளார் இதில் எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகம் என்று திட்டமிட்டு உள்ளார்கள்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement