Bluetooth Symbol Meaning in Tamil
நம்முடைய வாழ்க்கையில் நிறைய மாற்றமும் முன்னேற்றமும் நடந்துள்ளது அல்லவா..? அதாவது நாம் அனைவருமே கணினி உலகத்தில் இருப்பதால் அனைத்து சேவைக்கும் தொழில்நுட்பம் உள்ளது. அனைத்தையும் நாம் ஸ்மார்ட் போனின் மூலம் தெரிந்து கொள்கிறோம். அதுவும் இல்லாமல் இப்போது உள்ள குழந்தைகள் அனைவருமே விவரமாக உள்ளது. ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் தான் சாப்பிடுவது என்று கேள்வி இருக்கும். நம்முடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்துமே அனைத்து குழந்தைகளுக்கும் தெரிகிறது. அதாவது வாட்சப், இன்ஸ்டாகிராம், face book என அனைத்தும் தெரியும்.
அதேபோல் ஒருவருடைய இன்டர்நெட்டை நாம் எப்படி பயன்படுத்துவது என்று அனைத்தும் தெரிகிறது. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் ஸ்மார்ட் போனில் மிகவும் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் அதில் wifi, Bluetooth என இதுபோன்ற அமைப்பும் உள்ளது. இது அனைத்தையும் எப்படி உருவாக்கி இருப்பார்கள் என அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதனை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். முக்கியமாக Bluetooth பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போகிறோம். இதனுடைய லோகோ ஒரு பற்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஒரே குழப்பமாக இருக்கா வாங்க அதனை பற்றிய செய்திகளை பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Bluetooth Symbol Meaning in Tamil:
டென்மார்க் என்ற நாட்டின் அரசருடைய பெயர் தான் இந்த Bluetooth பெயராகும். இன்னும் தெளிவாக பார்க்கலாம். இந்த அரசர் பெயர் முழு பெயர் ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன் என்பதாகும். இவருக்கு இன்னொரு பெயர் உள்ளது. அது ரூனிக் ஹரால்ட்ர் குனுக் என்பது ஆகும்.
இவருடைய ஆட்சி காலம் குறைந்த காலம் ஆகும். அதாவது கிபி 958. மிகவும் குறைந்த ஆட்சி காலமே இவர் அரசாண்டு இருக்கிறார். இருந்தாலும் அக்காலகட்டத்திற்குள்ளே டென்மார்க் மற்றும் நார்வேயை ஒன்றிணைத்திருக்கிறார் ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன் அரசன்.
அக்மார்க் என்றால் என்ன இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா
இவருடைய புனைபெயர் நமக்கு விளக்குவது இவருடைய பட்ட பெயர் ப்ளூடூத் என்றும் ப்ளாக்டூத் என்றும் அழைப்பார்கள். இதற்கும் இந்த Bluetooth பெயர் வந்ததற்கும் என்ன காரணம் என்று யோசிப்பீர்கள். அவர் மிகவும் குறுகிய காலத்தில் டென்மார்க்கையும் நார்வேயையும் இணைத்தது போலவே நம்முடைய ப்ளூடூத் தொழில்நுட்பம் பல்வேறு மின்னணு சாதனங்களை குறுகிய காலத்தில் இணைக்கும். அதனால் தான் அறிவியல் விஞ்ஞானிகள் Bluetooth என்ற பெயர் வைத்தார்கள்.
அந்த அரசரின் பற்கள் மிகவும் கருநீல நிறத்தில் இருக்குமாம். அதனால் தான் அவருக்கு ப்ளூடூத் என்ற பெயர் வந்தது. இவருக்கு அவுரிநெல்லி (Blueberry) என்கிறார்கள். அதனை விடாமல் சாப்பிட்டதால் அவருடைய பற்கள் நிறம் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் தான் Hagall (*) மற்றும் Bjarkan (B) என்ற அவர் பெயரின் இனிஷியலை குறிக்கின்றன. இதனை சேர்த்து தான் விஞ்ஞானிகள் லோகோவை வடிவமைத்தார்கள்.
Amazon Logo -வில் எதுக்கு இந்த அம்புக்குறி இருக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |