நமது அனைவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். அது நமது தனித்தன்மை என்று சொல்லவர்கள். இப்படி விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் இருக்கும். இப்படிபட்ட பண்புகள் அனைவருக்கும் ஒரே விதமான இருப்பது இல்லை. இவை சில உயிரினங்களுக்கு சில வகைகளில் மறுபடும். அவை இந்த உயிரினத்தை மற்ற உயிரினக்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும். அந்த வகையில் இன்று பறவைகளுக்கு உள்ள தனித்துவமான பண்புகளை தெரிந்துகொள்ளோம்.
பறவைகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
வாத்து:
வாத்துகள் தூங்கும் போதும் விழிப்புடன் இருக்கும். அதாவது வாத்தின் மூளை அவற்றின் உறக்கத்தின் போது இரண்டாக செயல்படுகிறது. ஒரு மூளை உறங்கும் நிலையிலும் மற்ற ஒரு பகுதி சுறு சுறுப்புடனும் இருக்கும்.
வாத்துகள் கூட்டமாக உறங்கும் போது வெளிப்புற விழிம்பில் இருக்கும் வாத்துகள் கண்ணை திறந்துகொண்டே உறங்கும். தங்களை வேட்டைக்காரர்களிடம் பாதுகாக்க இவ்வாறு செய்கின்றனர்.
அல்பாட்ரோஸ்:
அல்பாட்ரோஸ்கள் பறவை என்பது கடல் பறவை ஆகும். இந்த பறவைகளுக்கு நீளமான இறக்கைகள் உண்டு. இவை வானில் பல மணி நேரம் அசையாமல் பறக்கும். அல்பாட்ரோஸ்கள் பறவைகள் தங்கள் வாழ்நாளில் பல வருடங்களை நிலத்தை தொடாமலே வாழும். இவை கடல் மீது நூற்றுக்கணக்கான மைல்கள் கடக்கும்.
பென்குயின்:
பென்குயின் நிமிர்ந்து நடக்க கூடியது. இவை தங்களின் பெரும்பாலான நேரத்தை கடலில் செலவிடும். வேகமாக நீந்தகூடிய இனத்தில் பென்குயினும் ஒன்று. ஆனால் பறக்க முடியாத பறவை இனமும் இது தான்.
இவற்றால் பறக்க முடியாவிட்டாலும் 9 அடி வரை குதிக்கும் திறன் கொண்டது.
காகம்:
காகங்கள் மனித முகங்களை அடையாளம் கண்டுகொள்ள கூடிய ஒரு பறவை இனமாகும்.
தீக்கோழி:
தீக்கோழியை நீங்கள் கண்டால் உங்களால் கண்டிப்பாக அதன் கண்ணில் தான் உங்கள் பார்வை செல்லும். அதை தவிர்ப்பது கடினம்.
தீக்கோழிக்கு நிலத்தில் வாழும் விலங்கின் கண்களை விட பெரியது. அதாவது பறவைகள் கண்கள் அவற்றின் மூளைகளை விட பெரியது. அந்தவகையில் தீக்கோழிக்கு கண்கள் பெரியது. தீக்கோழி கண்கள் மனித கண்ணை விட 5 மடங்கு பெரியது.
உலகிலேயே மிகச்சிறிய பறவை எது உங்களுக்கு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |