உலக சிந்தனை நாள் | Ulaga Sinthanai Thinam

Ulaga Sinthanai Thinam

உலக சிந்தனை தினம் | World Thinking Day

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலக சிந்தனை நாள் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம். போட்டி தேர்வுகளில் இது போன்ற பல வித்தியாசமான கேள்விகள் தான் பெரும்பாலும் கேட்கப்படுகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க உலக சிந்தனை நாள் எப்போது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

உலக தாய்மொழி தினம் எப்போது?

உலக சிந்தனை நாள் எப்போது?

விடை: உலக சிந்தனை நாள் பிப்ரவரி 22-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலக சிந்தனை தினத்தின் வரலாறு:

பெண்கள் வழிகாட்டும் மற்றும் பெண்கள் ஸ்கவுட் (women’s guide and scout) இயக்கத்தில் 1926-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் ஒரு சிறந்த விழிப்புணர்வு நாளாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தார்கள்.

அமெரிக்க நாட்டில் நடந்த 4-ஆம் ஆண்டு உலக மாநாட்டில் உலக சிந்தனைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதலில் இது சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், வருடம் ஒருமுறை பெண்கள் வழிகாட்டும் மற்றும் பெண்கள் ஸ்கவுட் இயக்கம் மென்மேலும் செல்ல, ஒவ்வொருவரும் நன்றியையும் அன்பையும் பகிர வேண்டும் என முடிவு செய்தனர்.

ஸ்கவுட் இயக்கத்தை தொடங்கிய லார்ட் பேடன் பௌல் மற்றும் லேடி பேடன் பௌல் ஆகிய இருவரின் பிறந்த தினம் பிப்ரவரி 22-ஆம் தேதி ஆகும். எனவே அவர்கள் பிறந்த பிப்ரவரி 22-ஆம் தேதியே சிறப்பு நாளாக கொண்டாட பிப்ரவரி 22 சிந்தனை தினமாக கொண்டாடி வந்தனர்.

உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?

 

இந்த சிந்தனை தினமானது 1932-ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி நன்கொடை பெற்று இந்த இயக்கத்தை மேலும் உயர்த்த முடிவு செய்தனர். நீண்ட காலத்திற்கு பிறகு 1999-ஆம் ஆண்டு டப்லினில் நடந்த 30-ஆம் உலக மாநாட்டில் உலக சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil