உலக மகள்கள் தினம் எப்போது? | Ulaga Magalgal Thinam

World Daughter's Day in Tamil 

உலக மகள்கள் தினம் | World Daughter’s Day in Tamil 

பெண் குழந்தைகள் எப்போதுமே கடவுளுக்கு ஒப்பானவர்கள். தந்தைமார்களுக்கு பெண் குழந்தை என்றாலே எப்போதும் ஒரு தனி பாசம் இருக்கும்.  தன்னுடைய மகளுக்கென நாள் முழுவதும் அயராது உழைப்பார்கள். கேட்கின்ற பொருளை இல்லை என்று கூறாமல் மகளுக்காக பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள் தந்தை. தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்றவை அன்னை மற்றும் தந்தையின் அன்பை போற்றும் நாளாக இருப்பது போல், மகள் என்ற புனித உறவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக குடும்பத்தினருடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வாங்க உலக மகள்கள் தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

தந்தையர் தினம் எப்போது?

உலக மகள்கள் தினம் எப்போது?

விடை: உலகம் முழுவதும் மகள்கள் தினம் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

மகள்கள் தினம் சிறப்பு:

பல நாடுகளில் பெண் குழந்தைகளை சுமையாக தான் பார்க்கிறார்கள். ஆண் குழந்தைக்கு கொடுக்கப்படும் சம உரிமை பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை. ஆண் – பெண் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், சில நாடுகளின் அரசுகள் மகள்கள் தினத்தை முன்னெடுத்துள்ளன.

உலக மகள்கள் தினம் அன்று வீட்டில் இருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்களுடைய மகளுக்கு பரிசு பொருள்களை வழங்கி நாளினை சிறப்பிக்கிறார்கள்.

அன்றைய நாளில் மகளுடன் வெளியில் சென்று மகள் கேட்கும் பொருள்களை வாங்கி அவர்களை சந்தோசப்படுத்துகிறார்கள்.

உலக அமைதி நாள்

மகள்கள் தினத்தின் வரலாறு:

பெண் குழந்தை என்பது ஒரு குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் இன்றைய சமூகத்தில் ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தைகளை சற்று தாழ்வாகத்தான பார்க்கிறார்கள். மகள்கள் தினம் என்பது ஒவ்வொரு குடும்பத்தினர் மகள்களுக்காக கொண்டாடும் ஒரு குடும்ப விழாவாக மாறி வருகிறது.

மேலும் இந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் அன்று விடுமுறை தினம் என்பது கூடுதல் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நாள் முழுவதும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக மகள்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

மகள்கள் தினத்திற்கான சிறந்த வாசகம்:

  1. நமது இதயத்தை முடிவில்லாத அன்பால் நிரப்ப வானத்தில் இருந்து வந்த தேவதை – மகள்

2. தந்தையின் வயது அதிகமாகும் போது அவருக்கு மிகவும் பிடித்தமானவர் மகளைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

3. ஒரு மகள் என்பவர் கடந்த காலத்தின் ஒரு மகிழ்ச்சியான ஞாபகம், நிகழ்காலத்தின் ஒரு மகிழ்ச்சியான தருணம், வருங்காலத்தில் நிஜம் மற்றும் நம்பிக்கை.

4. மகள் என்பவர் கௌரவப்படுத்த வேண்டியவர். நீங்கள் உங்கள் மகளை கௌரவப்படுத்துங்கள்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil