உலக ரோஜா தினம் | World Rose Day in Tamil

Advertisement

உலக ரோஜா தினம் எப்போது? | World Rose Day 2022 in Tamil

பூக்கள் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு பூக்களும் தனித்துவமான நிறத்தையும், வாசனையையும் கொண்டுள்ளது. பூக்களில் மல்லிகை, முல்லை, செம்பருத்தி, தாமரை, லில்லி, Tulip, ரோஜா இன்னும் ஏராளமான பூக்கள் உள்ளன. இதில் மக்களிடத்தில் எப்போதும் பயன்பாட்டில் உள்ளது என்றால் அது ரோஜா தான். இந்த மலரில் பல விதமான அதிசயங்கள் உள்ளது. ரோஜாவின் சிறப்புகளை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ரோஜா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் இந்த தொகுப்பில் உலக ரோஜா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.

உலக காற்று தினம்

உலக ரோஜா தினம்:

விடை: பூக்களின் அரசியாக இருக்கும் ரோஜா மலரை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22-ம் தேதி உலக ரோஜா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Ulaga Roja Thinam:

  • இது புற்றுநோய் நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பதால் அந்நாளில் ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது. புற்றுநோய் உள்ளவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.
  • புற்றுநோய் சிகிச்சை பெரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, எவ்வித பயமும் இன்றி விரைவில் அவர்கள் குணமடையவும், அவர்களது வாழ்நாள் நீடிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • ரோஜா மலரை அதிக அளவில் சீனா விவசாயிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே விளைவித்து வருகின்றனர்.
  • அரேபியா நாடுகளில் இந்த பூக்கள் வாசனை திரவியத்திற்கும், மருத்துவ பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?

உலக ரோஜா தினம்:

  • உலகில் 100 மற்றும் அதற்கு மேற்பட்ட வகைகளில் ரோஜாக்கள் உள்ளது. இது ரோசசி குடும்பத்தை சேர்ந்தது. ரோஜா மலரின் தாயகம் ஆசியா. ஒரு சில ரோஜா மலர்கள் வெவ்வேறு வகையான தாயகத்தை கொண்டுள்ளது.
  • Rose என்ற பெயர் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. லத்தின் மொழியில் ரோஜா என்பதற்கு அன்பு என்று பொருள்.
  • உலகிலேயே பெரிய ரோஜா செடி ‘லேடி பேங்க்சியா’ வகை (Lady Banksia) ஆகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோஜா தோட்டம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவாகும். இங்கிலாந்தின் தேசிய மலராக ரோஜா உள்ளது. ரோஜா பூ உற்பத்தியில் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
  • ரோஜாக்களில் உள்ள மஞ்சள், சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா, ஆரஞ்சு போன்ற பல நிறங்களில் உள்ளது. ஒவ்வொரு நிறங்களும் அன்பு, சோகம், நட்பு, சமாதானம், காதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதால் தான் காதலர் தினத்தன்று ரோஜா பூக்கள் கொடுக்கப்படுகிறது.
உலக புற்றுநோய் தினம்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement