தமிழ்நாட்டின் மாப்பசான் யார்?
ஹலோ.. பொதுநலம் வாசகர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தமிழ்நாட்டின் மாப்பசான் யார் என்று பார்க்கலாம். இது போன்ற அடைமொழி கொண்டு அழைக்கப்பெறும் சான்றோர்களின் பெயர்கள் நடைபெறும் பொது தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்டு வருகின்றன. இந்த பதிவு மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க தமிழ்நாட்டின் மாப்பசான் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் மாப்பசான் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: ஜெயகாந்தன் அவர்கள் தமிழ்நாட்டின் மாப்பசான் என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் இவருக்கு சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
பிறப்பு:
தமிழ்நாட்டின் மாப்பசான்: இவர் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, 1934-ம் ஆண்டு கடலூரில் பிறந்தார். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இளமையில் கல்வி மீது ஆர்வம் இல்லாததால் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றார். பள்ளி செல்லாததால் அவருக்கும் அவர் தந்தைக்கும் மனவருத்தம் ஏற்பட்டது. இதனால் ஜெயகாந்தன் அவர்கள் 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி மாமாவின் வீட்டில் வசித்தார்.
இலக்கிய ஆர்வம்:
- Tamilnattin Mappasan: பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு ஜெயகாந்தனின் அம்மா சென்னையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள நபரின் வீட்டுக்கு அழைத்து சென்றார், கட்சி அலுவலகத்தில் சிறிது காலம் இருந்தார். அங்கு உள்ளவர்களுடன் நன்கு பழகினார். கட்சியில் பேசப்படும் சொற்பொழிவுகளை கேட்டு அவருக்கு இலக்கியம் மீது ஆர்வம் வந்தது. பின் ஜீவானந்தம் என்பவரின் உதவியால் கல்வி பயின்று இலக்கண, இலக்கியத்தில் கை தேர்ந்தவர் ஆனார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1949-ல் தடைவிதிக்கப்பட்டது, அதனால் தஞ்சாவூரில் செருப்பு விற்கும் கடையில் சிறிது காலம் வேலை செய்தார். அப்பொழுதே சில கதைகளை எழுத ஆரம்பித்தார். கட்சி மற்றும் காமராஜரின் மீது இருந்த பற்றால் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் தொண்டனாக சேர்ந்தார்.
எழுத்தாளர்:
- தமிழ்நாட்டின் மாப்பசான்: பின் 1950-ல் சிறந்த எழுத்தாளராக உருவானார். இவர் எழுதிய கதைகள் நாளிதழிலில் வெளியிடப்பட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. சிறந்த எழுத்தாளர் என்ற புகழும், கவுரவமும் கிடைத்தது. எழுத்துலகில் தனது கால் தடத்தை பதித்த ஜெயகாந்தன் அவர்களுக்கு திரையுலகிலும் புகழடைய வேண்டும் என்று எண்ணினார். அதனால் உன்னைப் போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற கதைகள் படமாக்கப்பட்டன.
படைப்புகள்:
- Tamilnattin Mappasan: இதில் உன்னைப் போல் ஒருவன் என்ற படத்திற்கு பத்ம பூஷன் விருது கிடைத்தது. இவர் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.
- ஒரு கதாசிரியனின் கதை, பிரம்ம உபதேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் இன்னும் பல கதைகளை எழுதியுள்ளார்.
- உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புது செருப்பு கடிக்கும் போன்றவை இவர் இயக்கிய திரைப்படங்கள் ஆகும்.
விருதுகள்:
- 1972 – சாஹித்ய அகாடமி விருது
- 2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
- 2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.
- 2011 – ரஷ்ய விருது
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் |
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |