நோபல் பரிசு பெற்றவர்கள் | Nobel Prize Winners in India in Tamil
நோபல் பரிசு பெற்றவர்கள்: வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் நோபல் பரிசு பெற்ற இந்தியர்களின் பெயர் பட்டியலை பார்க்கலாம். ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) என்பவரின் நினைவு நாள் அன்று இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நோபல் பரிசு வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் போன்ற துறைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 1901-ம் ஆண்டில் இருந்து இந்த நோபல் பரிசு பல சாதனையளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சரி வாங்க இப்பொழுது நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலை கீழே பார்க்கலாம்.
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்:
- நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்:
- அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்:
- 1902-ம் ஆண்டு ரொனால்டு ராஸ் என்பவருக்கு மருந்தியல் துறைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர்.
- 1907-ம் இரட்யார்ட் கிப்ளிங் என்பவருக்கு இலக்கிய துறைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர்.
- 1913-ல் இரவீந்திரநாத் தாகூர் என்பவருக்கு இலக்கிய துறையில் கீதாஞ்சலி படைப்பிற்காக கொடுக்கப்பட்டது.
- 1930-ம் ஆண்டு சர்.சி.வி ராமனுக்கு இயற்பியல் துறையில் ராமன் விளைவு படைப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 1968-ம் ஆண்டு ஹர்.கோவிந்த் குரானாவிற்கு மருத்துவ துறையில் மரபியல் படைப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 1979-ம் ஆண்டு அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 1983-ம் ஆண்டு சுப்பிரமணிய சந்திரசேகர் இயற்பியல் துறையில் சந்திரசேகர் லிமிட் என்ற படைப்பிற்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.
- 1998-ம் ஆண்டு பொருளாதாரத்திற்காக அமர்த்தியாசென் நல இலக்கணம் என்ற படைப்பிற்காக நோபல் பரிசு வாங்கினார்.
- 2001-ம் ஆண்டு இலக்கிய துறையில் V.S நெய்பால் சுற்றுச்சூழல் படைப்பிற்காக நோபல் பரிசு வாங்கினார்.
- 2009-ம் ஆண்டு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்பவருக்கு வேதியியல் துறையில் ரைபோசோம் படைப்பிற்காக நோபல் பரிசு வாங்கியவர்.
- 2014-ம் ஆண்டு கைலாஷ் சத்தியார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு குழந்தை தொழிலாளர் நலன் படைப்பிற்காக வாங்கினார்.
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி:
- நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மேரி கியூரி ஆவார். 1903 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான பரிசை அவரது கணவர் பியேர் கியூரி, மற்றும் என்றி பெக்கெரல் ஆகியோருடன் சேர்ந்து பெற்றார்.
Nobel Prize First Indian in Tamil – நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார் பெயர்:
- நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
முதலில் நோபல் பரிசு பெற்றவர்கள்:
- 1979-ம் ஆண்டு அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி ராமன் ஆவார்.
- பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் அமர்த்தியாசென்.
- மருத்துவ துறைக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ஹர்.கோவிந்த் குரானா
நோபல் பரிசு வழங்கபட்ட துறைகள்:
- வேதியியல்
- இயற்பியல்
- இலக்கியம்
- அமைதி
- மருத்துவம்
நோபல் பரிசு வழங்கும் நாடு எது:
- 1968-ம் ஆண்டு முதல் பொருளாதரத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
- அமைதிக்கான நோபல் பரிசை நார்வே (கல்வி நிறுவனம்) வழங்குகிறது.
- வேதியியல், இயற்பியல், இலக்கியம், மருத்துவம் போன்ற துறைகளுக்கு சுவீடன் (கல்வி நிறுவனம்) வழங்குகிறது.
- இந்த நோபல் பரிசு டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் பெண்மணிகள் |
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்கள் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |