இந்தியாவின் அண்டை நாடுகள் யாவை? | Neighbouring Countries of India in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்.. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவரும் பொது அறிவு சார்ந்த விஷயங்களை அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை பற்றி படித்தறியலாமா.. சரி வாங்க இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்கள் மற்றும் அந்த அண்டை நாடுகள் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்கள் – Indiavin Andai Nadukal in Tamil:
இந்தியா தன் எல்லைகளாக சீனா, நேபாளம், பூடான், வங்காள தேசம் (பங்களாதேஷ்), பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய ஏழு அண்டை நாடுகளுடன் பகிர்ந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவின் வட மேற்கிலும், சீனா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இந்தியாவின் வடக்கிலும், வங்காள தேசம் இந்தியாவின் கிழக்கிலும், மியான்மர் கிழக்கிலும் உள்ளன.
இந்திய பெருங்கடலால் பிரிக்கப்பட்டு உள்ள இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள நாடுகள் தென்கிழக்கில் இலங்கை, தென்மேற்கில் மாலத்தீவு ஆகும்.
இந்தியாவின் அண்டை நாடுகள் கடந்த 5000 ஆண்டுகளாக இந்திய துணைக் கண்டத்தில் நிலவி வந்த ஒரே மாதிரியான பண்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளன.
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் |
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன? |
இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |