மிக பழமையான இலக்கண நூல் எது? | Tamilil Namaku Kidaithulla Miga Palamaiyana Nool
நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் மிக பழமையான நூல் எது என்று தெரிந்துக்கொள்ளலாம்.. தமிழில் உள்ள அனைத்து நூல்களுமே நமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை தான். ஒவ்வொரு நூலுமே வாழ்வியலுக்கு மிகவும் அற்புத கருத்துக்களை விளக்கி கூறுகிறது. சரி வாங்க தமிழில் மிக பழமையான நூல் எது என்று தெரிந்துக்கொள்ளலாம்..
இந்தியாவின் மிகப்பெரிய பீடபூமி எது? |
மிக பழமையான நூல் எது?:
விடை: தமிழில் மிக பழமையான நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியம் பற்றிய சிறு குறிப்பு:
தொல்காப்பியம் என்பது தமிழில் மிகவும் பழமையான நூலாகும். தொல்காப்பியம் நூல் தமிழுக்கு கிடைத்த முதல் நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது.
தொன்மையான காப்பியக் குடியில் பிறந்தவர் தொல்காப்பியர் அத்தொல்காப்பியரால் செய்யப்பட்டமையின் இந்நூல் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றது.
தொல்காப்பியம் பெயர் வர காரணம்:
தொன்மை+காப்பியம்= தொல்காப்பியம்
இந்த நூல் மிகவும் தொன்மையான நூல் என்பதால் தான் தொல்காப்பியம் என்று பெயர் வந்தது.
தொல்காப்பியம் காலம்:
தொல்காப்பியரின் காலம் மிகவும் தொன்மையானது. அவர் வாழ்ந்த காலம் பற்றி அறிஞர்களிடம் பல கருத்துக்கள் இருக்கிறது. தொல்காப்பியத்தின் காலம் கி.மு 5320 முதல் கி.மு 6ஆம் நூற்றாண்டு வரை பலவகையினவாக வரலாற்று அறிஞர்களால் கணித்துக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன? |
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம் |
தொல்காப்பியத்தின் அமைப்பு:
தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பியர் இலக்கணத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளார். அவை: எழுத்து, சொல், பொருள் என்பவையாகும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |