இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம் எது
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட உயர் நீதிமன்றம் எவை மற்றும் உயர் நீதிமன்றம் என்றால் என்பதை பற்றி பார்க்கலாம். இந்தியாவில் மொத்தம் 25 உயர்நீதிமன்றம் உள்ளது. இந்தியாவில் உள்ள பழமையான உயர் நீதிமன்றம் கல்கத்தா உயர்நீதிமன்றம். இது 1862-ம் ஆண்டு ஜுலை 1-ல் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றம். உயர்நீதி மன்றத்தின் நீதிபதி ஓய்வு பெரும் வயது 62. சரி வாங்க உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம் எது?
1861-ம் சட்டத்தின் அடிப்படையில் 1862-ம் ஆண்டு ஆகஸ்ட்- 15ம் தேதி சென்னையிலும், ஆகஸ்ட்- 14ம் தேதி பம்பாய் மற்றும் கொல்கத்தாவிலும் முதன் முதலாக உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
1866-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது.
1884-ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது.
1916-ம் ஆண்டு பாட்னாவில் உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
1928-ம் ஆண்டு ஜம்மு காஸ்மீரிலும், 1947-ம் ஆண்டு ஆகஸ்ட்- 15ம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானவிலும் உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம் பெயர் என்ன:
1975-ம் ஆண்டு சிக்கிமிலும், 2000-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சட்டிஸ்கரிலும் நவம்பர் 9-ல் உத்தரகாண்டிலும், நவம்பர் 15-ல் ஜார்கண்டிலும் உயர்நீதிமன்றம் துவங்கப்பட்டது.
2013-ம் ஆண்டு மார்ச்-23ம் தேதி மேகாலயாவிலும், மார்ச் 25-ல் மணிப்பூரிலும் மற்றும் மார்ச் 26-ம் தேதி திரிபுராவிலும் கொண்டு வரப்பட்டது.
2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்திலும் உயர்நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் மொத்தம் 25 உயர்நீதிமன்றம் உள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமராவதியில் உள்ள ஆந்திரபிரதேசத்தில் இருப்பது புதிய உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி T.முத்துசாமி (1877)
உலகிலேயே லண்டனுக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய நீதித்துறை வளாகம் சென்னை உயர்நீதிமன்ற வளாகம். தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் பொதுவாக 01 உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.