இந்தியாவின் முதல் மாவட்டம் எது தெரியுமா?

Advertisement

First District in India

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ஒரு பொது அறிவு விஷயத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்தியாவின் முதல் மாவட்டம் எது? இந்தியாவில் முதல் மாவட்டம் எங்கு பிரிக்கப்பட்டது? அந்த மாவட்டத்தின் பெயர் என்ன என்பது குறித்த தகவலை பற்றித்தான் அறிய போகிறோம்..

ஆக பதிவை முழுமையாக படித்து தகவலை தெரிந்துகொள்ளுங்கள். மேலும் பொது அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் மற்ற பதிவுகளை பார்க்க நமது பொதுநலம்.காம் பதிவை தொடர்ந்து பார்வையிடுங்கள். சரி வாங்க இந்தியாவின் முதல் மாவட்டம் எனது என்பது குறித்த தகவலை இப்பொழுது படித்தறியலாம்.

இந்தியாவின் முதல் மாவட்டம் எது தெரியுமா?

விடை: சேலம்.

இந்தியாவில் மொத்தமாக 766 மாவட்டங்கள் உள்ளது. அவற்றில் முதலாவகதக பிரிக்கப்பட்ட மாவட்டம்  தமிழ்நாட்டை சேர்ந்த இந்த சேலம் மாவட்டம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?

சேலம் பற்றிய சுவாரசியமான தகவல்:

1 இந்தியாவின் முதல் மாவட்டமாக சேலம் 1792ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.

2 தற்போது தனித்தனி மாவட்டங்களாக உள்ள நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 7 ஆயிரத்தி 530 சதுர கி.மீ கொண்ட பகுதியாக சேலம் மாவட்டம் இருந்தது.

3 சேலம் நகராட்சி 1866 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ஆங்கிலேயேர்களால் உருவாக்கப்பட்டது.

4 சேலமும் சுற்றியுள்ள ஊர்களும் மாம்பழ உற்பத்தியில் சிறப்பதால் இதற்கு “மாங்கனி மாநகரம்” என்ற பெயரும் உண்டு

5 தற்சமயம் இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை சேலத்தில் அமைந்திருப்பதால் சேலம் மாவட்டம் “ஸ்டீல் சிட்டி” என்றும் அழைக்கப்படுகிறது.

6 1937 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலம் மாவட்டத்தில்தான் என்ற சிறப்பு பெற்றது.

7 சேலத்தில் இருக்கும் ரயில்வே ஜங்ஷனின் நடைமேடை இந்தியாவிலேயே மிக நீளமான நடைமேடையாகிறது.

8 சேலம் வணிகத்தில் பெயர் பெற்ற மாவட்டம். இங்கு பிரதான தொழிலாக விளங்குவது கைத்தறியும், ஜவ்வரிசி உற்பத்தியும், வெள்ளி கொலுசுகள் தொழிலும் ஆகும்.

9 உலகின் மிக உயரமான முத்துமலை முருகன் கோவில் சேலம் மாவட்டத்தில் தான் இருக்கிறது.

10 சுற்றுலாவாசிகளுக்கு ஏற்ற மாவட்டமாகவும் சேலம் உள்ளது. இங்குள்ள “ஏழைகளின் ஊட்டி”யான ஏற்காடு சுற்றுலாவுக்கு மிகச்சிறந்த மலை வாசஸ்தலமாகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement