இந்திய ராணுவ விருதுகள் பெயர்கள் | Highest Military Award in India in Tamil
நம்முடைய நாட்டையும் நம்மையும் பாதுகாத்து வருவது இவர்கள் தான். இவர்கள் எல்லையில் இவர்களின் உயிர்களை பொருட்படுத்தாமல் எதிரிகளை நேருக்கு நேர் எதிர்த்து போராடுவதால் மட்டுமே நாம் இங்கு மகழ்ச்சியாக வாழ்ந்து நாட்களை கழித்துக்கொண்டு இருக்கிறோம்..! ஆகவே அவர்களை கௌரவிக்கும் விதமாக ராணுவத்தில் அவர்களுக்கு அளிக்கும் உயரிய விருதுதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
ஒவ்வொரு துறைக்கும் ஒரு விருது உயர்ந்த விருதாக கருதப்பட்டு, அவ்விருதினை பெற தகுதியானவர்களுக்கு காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்திய ராணுவ துறையிலும் உயரிய விருதுகள் வழங்கப்படும். ஆனால், அவை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகள்:
பரம் வீர் சக்கரம் விருது ஆகும். இந்த விருதை பெறுவதற்காக வீரர்கள் அனைவரும் அவர்களின் அயலாத உழைப்பையும் கொடுத்துளார்கள். அவர்கள் அளிக்கும் தியாகத்திற்கு இது மட்டும் தான் சரியான பரிசாக இருக்கும்.அதேபோல் வீரர்கள் எதிரிகளிடம் மிக உயரந்தளவு வீரத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய படைவீரர்களுக்கு வழங்குகிறது. இந்த விருதுகள் வீரர்களின் மரணத்திற்கு பிறகு பெரும்பாலும் கொடுக்கிறது.
ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு இந்தியா குடியரசான பிறகு குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15, 1947 முதலே கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை யார் இந்த விருதுகளை பெற்றார் என்பதை தெரிந்து கொள்வோம்.
20 முக்கிய இந்திய விருதுகள் பெயர்கள்..!
பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்கள்:
- மேஜர் சோம்நாத் சர்மா
- லான்ஸ் நாயக் கரம் சிங்
- செகண்ட் லெப். இராமா ரகோபா ராணே
- நாயக் ஜாதுநாத் சிங்
- ஹவில்தார் மேஜர் பிரு சிங் செகாவாத்
- கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா
- மேஜர் தன்சிங் தாப்பா
- சுபேதார் ஜோகீந்தர் சிங்
- மேஜர் சைத்தான் சிங்
- ஹவில்தார் அப்துல் ஹமித்
- லெப்.கர்ணல் அர்தசிர் தாராபூர்
- ஆல்பர்ட் எக்கா
- நிர்மல் சிங் செக்கோன்
- அருண் கேதார்பால்
- கோசியார் சிங் தாகியா
- நயீப் சுபேதார் பானா சிங்
- மேஜர் பரமேஸ்வரன்
- மனோஜ் குமார் பாண்டே
- யோகேந்திர சிங் யாதவ்
- சஞ்சய் குமார்
- விக்கிரம் பத்ரா
இசை துறையின் உயரிய விருது என்ன?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |