வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது?

Updated On: January 14, 2026 5:27 PM
Follow Us:
Indhiyavin Irandavathu Uppu Neer Eri
---Advertisement---
Advertisement

Indhiyavin Irandavathu Uppu Neer Eri | இந்தியாவின் இரண்டாவது உப்பு ஏரி

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி (India’s Second Largest Salt Lake in Tamil) எது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். மிகப்பெரிய நீர்நிலைகள் ஏரி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பலவகையான உப்பு ஏரிகள் இருக்கின்றன. அதாவது இயற்கையாக தோன்றிய ஏரிகளும் உள்ளன. செயற்கையாக கட்டப்பட்ட ஏரிகளும் உள்ளன. இந்த பதிவில் இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். இந்த பதிவு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதுபோன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள GK  in Tamil இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி?

விடை: பழவேற்காடு ஏரி

இது இந்தியாவில் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி ஆகும். சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி என்று அழைப்பர்.

பழவேற்காடு பறவைகள் காப்பகமாக விளங்கும் இந்த ஏரி, சுமார் 60 கிலோ மீட்டர் நீளமும், 17.5 கிலோ மீட்டர் அகலமும், உள்ள இது, பரவலாக 1 மீட்டர் – 10 மீட்டர் ஆழமும், 250 கிமீ முதல் 460 கிமீ வரை பரப்பளவுகளும் கொண்டதாகும்.

கொல்லேறு ஏரி, இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஏலூரு நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நன்னீர் ஏரி, சுமார் 90,100 எக்டேர்கள் (2,22,600 ஏக்கர்கள்) கொண்டதாகும்.

பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இவ்வேரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ ஆகவும் வேறுபடும்.

பழவேற்காடு ஏரி கடலுக்கும் ஏனைய நீர் ஆதாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியாக இருக்கிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஏரியின் மேற்கே பக்கிங்காம் கால்வாய் நீரும் இங்கே கலக்கிறது. ஏரியின் நீர் வங்காள விரிகுடாவில் மழைக்காலங்களில் மட்டுமே கலக்கிறது. வெள்ளம் ஏற்படும் காலக்கட்டத்தில் நீரினை சேமித்து வைக்கவும், மழைக்காலங்களில் அதிகமான நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாக செயல்படுகிறது.

இந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது. கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. கடல் நீரின் தன்மை மாறிக்கொண்டே இருக்கும்.

இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது எது தெரியுமா?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now