இந்தியாவில் மிக நீளமான ரயில் எது.?
நண்பர்களே உங்களில் யாருக்கு ரயில் மிகவும் பிடிக்கும்..! பிடிக்கும் என்றால் அதனை பற்றிய அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லவா..? சிலருக்கு ரயில் என்றால் அதில் பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். காரணம் அதில் நாம் செல்கிறோம் என்று உணர்ச்சி கூட இருக்காது. அந்த அளவிற்கு ரயில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
நாம், ரயிலை பார்க்கும்போது அது நீளமாக போய் கொண்டே இருக்கும். அதனால், சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ரயில் போகிறது என்றால் பார்த்துக்கொண்டே இருக்கும். அப்படி, பார்க்கும்போது நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா.? இந்தியாவிலேயே உள்ள ரயில்களில் எது மிக நீளமான ரயில் என்று, அப்படி நீங்கள் யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் மிக நீளமான ரயில் எது தெரியுமா..?
இந்தியாவில் மிக நீளமான ரயில் எது தெரியுமா..? நீளம் என்றால் அது எவ்வளவு பெரியது என்று தெரிந்து கொள்வோமா..?
நீளமான ரயில் என்றால் அது சூப்பர் வாசுகி ரயில் தான். இந்த ரயில் கிட்டத்தட்ட 27 ஆயிரம் டன் நிலக்கரியை எடுத்து செல்லுமாம்..! இந்த நிலக்கரியை வைத்து 3000 மெகா வாட் பவர் பிளானட் ஒரு நாள் முழுக்க மின்சார உற்பத்தி செய்ய முடியும்..!
இந்த ரயிலில் 295 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கிறது. இது 5 சரக்கு ரயிலை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்தற்கு சமம். இதில் 5 இன்ஜின் இணைப்பட்டு இருக்குமாம்.

இந்த ரயிலின் நீளம் 3.1.2 கிலோ மீட்டர் ஆகும். இந்தியாவினுடைய 75 –வது சுதந்திர தினம் அன்றைக்கு போர்பா என்ற இடத்திலிருந்து நாக்பூர் வரைக்கும் இந்த சரக்கு ரயில் இந்தியன் ரயில்வேயால் இயக்கப்பட்டது.
தெற்கு மத்திய ரயில்வே இயக்குநரால் இயக்கப்படுகிறது. இடது சுமார் 3.5 கிமீ வரை நீளம் கொண்டது. இதன் இயக்க நேரம் சுமார் 4-5 மணி நேரம் ஆகும். இதுவே இந்தியாவில் இயங்கிய மிக நீளமான ரயில் ஒரு சரக்கு ரயில் ஆகும். இது, இந்தியாவின் மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட சரக்கு ரயிலாகும். ஐந்து ரேக்குகள் சரக்கு ரயில்களை ஒரு யூனிட்டாக இணைத்து இந்த ரயில் உருவாக்கப்பட்டது. இந்திய ரயில்வே இயக்கிய மிக நீளமான சரக்கு ரயில் இதுவே.
குறிப்பு: உலகில் மிக நீளமான ரயில் என்பது கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அது ஆஸ்திரேலியாவில் உள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 இந்திய ரயில்வே துறையில் வேலை பார்க்கின்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன தெரியுமா.?
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














