உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நாடுகள் | Ulagin Adhiga Makkal Thogai Ulla Nadu

World Largest Population Country in Tamil

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு | World Largest Population Country in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் எது என்று பார்க்கலாம். நம்முடைய உலகத்தில் மனிதர்களுடைய வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மக்கள் தொகை பெருக்கத்தில் பெரும்பாலும் ஆசிய நாடுகளே முதலிடத்தில் இருக்கிறது. அந்த வகையில் நாம் மக்கள் தொகை பெருக்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறோம் மற்றும் முதலிடத்தில் உள்ள நாடுகள் எது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Most Populated Country in The World in Tamil:

 1. சீனா
 2. இந்தியா
 3. அமெரிக்கா
 4. இந்தோனேசியா
 5. பாகிஸ்தான்
 6. பிரேசில்
 7. நைஜீரியா
 8. பங்களாதேஷ்
 9. ரஷ்யா
 10. மெக்ஸிகோ

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது?

 • அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. 2020-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1,439,323,776 அளவு மக்கள் தொகையை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 0.39% பெற்றுள்ளது.
 • உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1,380,004,385 அளவு மக்கள் தொகையை பெற்றுள்ளது. வளர்ச்சி விகிதம் 0.99% பெற்றுள்ளது. 2050-ம் ஆண்டில் மக்கள் தொகை பெருக்கத்தில் இந்திய முதலிடம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. இங்கு மக்கள் தொகை 2020-ம் ஆண்டின் படி 331,002,651 உள்ளது. கடந்த ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 0.59%.
உலகின் அகலமான நதி எது?

World Largest Population Country in Tamil:

 • உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது. 273,523,615 மக்கள் தொகையை 2020-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கொண்டுள்ளது. 1.07% வளர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது.
 • ஜந்தாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. 220,892,340 மக்கள் தொகையை 2020-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி அடைந்துள்ளது. வளர்ச்சி விகிதம் 2.00%.
 • ஆறாவது இடத்தில் பிரேசில் உள்ளது. 2020-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 212,559,417 அளவு உள்ளது. இந்த நாட்டில் 0.72 %வரை மக்கள் தொகை வளர்ச்சி அடைந்துள்ளது.
 • மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் ஏழாவது இடத்தை நைஜீரியா பிடித்துள்ளது. இங்கு மக்கள் தொகை 206,139,589 2020-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி உள்ளது, 2.58% வரை மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
 • எட்டாவது இடத்தில் பங்களாதேஷ் உள்ளது. 2020-ம் ஆண்டின் படி 164,689,383 மக்கள் தொகையை கொண்டுள்ளது. ஜனத்தொகை 1.01% வரை அதிகரித்துள்ளது.
 • ஒன்பதாவது இடத்தில் ரஷ்யா. இங்கு ஜனத்தொகை 2020-ம் ஆண்டின் படி 145,934,462 உள்ளது. 0.04% வரை மக்கள் தொகை உள்ளது.
 • அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மெக்சிகோ பத்தாவது இடத்தில் உள்ளது. 128,932,753 மக்கள் தொகையை கொண்டுள்ளது. மக்கள் தொகை 1.06% வரை அதிகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil