சாவே இல்லாத உயிரினம் எது..? | What is Immortal Creature in Tamil
இன்றைய பதிவு உங்கள் அனைவருக்கும் மிகவும் ஆச்சரியமுள்ளதாகத்தான் இருக்க போகிறது. இவ்வுலகில் கண் இல்லாத உயிரினம், பல் இல்லாத உயிரினம், காது இல்லாத உயிரினம் போன்ற பல உறுப்புகள் இல்லாத உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால் சாவே இல்லாமல் ஒரு உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா..? இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் கடைசி நாள் என்று ஒன்று இருக்கும். ஆனால் இந்த உயிரினத்திற்கு கடைசி நாள் என்பதே இல்லை. ஆமாங்க அப்படி சாகா வரம் வாங்கி வந்த உயிரினம் என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.
சாவே இல்லாத உயிரினம் எது..?
விடை : ஜெல்லி மீன் (Jellyfish)
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் – உலகின் முதல் உயிரினம்
Jelly Fish Informations in Tamil:
பசுபிக் பெருங்கடலில் மேற்கு பகுதியில் பால்யூ என்னும் தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள ஜெல்லி பிஷ் ஏரியானது 460 மீட்டர் நீளத்திலும், 160 மீட்டர் அகலத்திலும் , 50 மீட்டர் ஆழத்திலும் உள்ளது. இந்த ஏரியில் 10 மில்லியனுக்கும் அதிகமான கோல்டன் ஜெல்லி பிஷ்கள் வாழ்கின்றன.
இந்த கோல்டன் பிஷ்கள் உயிர் வாழ்வதற்கு சூரிய ஒளி தேவைப்படுவதால் இந்த மீன்கள் தினமும் சூரியன் உதிக்க தொடங்கியதும் ஏரியின் மேற்புறத்தில் வந்து காட்சியளிக்கிறது. பிறகு சூரியன் மறைய தொடங்கும் வேலையில் எரிக்குள் சென்று விடுகிறது. இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாவும் சிறியதாகவும் இருப்பதால் இந்த மீனை பார்ப்பதற்கும் ஏராளமான மக்கள் வருகின்றனர்.
இத்தகைய மீன்கள் மனிதர்களுக்கு ஆபத்து தரக்கூடியதாம். அதனால் இந்த மீன்களை அருகில் சென்று பார்க்கக்கூடாது என்றும் சொல்கிறார்கள். டைனோசர் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கோல்டன் ஜெல்லி மீன்கள் தோன்றி இருக்கின்றன.
உலக ஜெல்லி மீன் தினம்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 தேதி உலக ஜெல்லி மீன் தினம் கொண்டப்படுகிறது.இதையும் தெரிந்து கொள்ளுங்கள்- உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீன் கூட இருக்கா..!
ஜெல்லி மீன் உடலமைப்பு:
இந்த மீன் உடலின் மேல்பக்கத்தில் குடை போன்ற அமைப்பினை கொண்டிருக்கும். இவற்றின் உடலானது 5 சதவீதம் திட பொருளாலும் மீதமுள்ள 95 சதவீதம் நீரினாலும் ஆனது.
இந்த மீன்களின் உடல் உறுப்புகள் ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டால் மறுபடியும் தானாகவே வளர தொடங்கி விடும். எனவே இந்த மீன்கள் சாகவே சாகாதான்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |