ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது?

Advertisement

Aachiyavin Mikapperiya Palaivanam Ethu

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்ன வென்றால் ஆசியாவின் மிக பெரிய பாலைவனம் எது? அது எங்கு அமைந்துள்ளது, அதனுடைய பரப்பளவு எவ்வளவு, அதனுடைய தட்பவெப்ப நிலை எப்படி இருக்கும். இது போன்ற தகவல்களை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.

பொது அறிவு சார்ந்த போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள தயார் ஆகும் நபர்கள் இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வதன் மூலம் பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய அறிவு திறனும் மேம்படும் சரி வாங்க ஆசியாவின் மிக பெரிய பாலைவனம் எது என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உலகின் மிகப்பெரிய Railway Station எங்கு உள்ளது தெரியுமா..?

ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது? – Which is the largest desert in Asia?

A) கைசில் கும்
B) தார்
C) கரகம்
D) கோபி

சரியான விடை: கோபி 

ஆம் கோபி பாலைவனம் தான் ஆசியாவின் மிக பெரிய பாலைவனம் ஆகும். சரி வாங்க இந்த கோபி பாலைவனம் பற்றிய சில தகவல்களை படித்து தெரிந்துகொள்வோம்.

கோபி பாலைவனம் பற்றிய தகவல்கள்:

  1. உலகில் உள்ள பாலைவனங்களில் முக்கியமான பாலைவனமாக இந்த கோபி பாலைவனம் தான் காணப்படுகிறது.
  2. ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் கோபி பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.
  3. இது தெற்கு மங்கோலியாவிலிருந்து வடக்கு சீனா வரை 500,000 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  4. இந்த கோபி பாலைவனத்தின் நீளம் 1500 கிலோ மீட்டர் மற்றும் அகலம் 800 கிலோ மீட்டராகவும் காணப்படுகிறது.
  5. இதனுடைய பரப்பளவு எவ்வளவு என்றால் 1.3 மில்லியன் சதுர கிலோ மீட்டராக காணப்படுகிறது.
  6. இது ஒரு குளிர் பாலைவனத்திற்குள் தான் அடங்குகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 910 தொடக்கம் 1520 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.
  7. இதனுடைய வருடாந்திர சராசரி மழை பொலிவு பொறுத்தவரை 194 மில்லி மிட்டார்களாக காணப்படுகிறது. இதனுடைய சராசரி வெப்ப நிலை பொறுத்தவரை வெப்ப நிலை காலங்களில் 45c ஆக காணப்படுகிறித்து. குளிர் காலங்களில் -40c முதல் 50c வரை காணப்படுகிறது.
  8. உலகிலேயே மிக பெரிய பாலைவனகள் பட்டியலில் இந்த கோபி பாலைவனம் 5-வது இடத்தில் உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

Advertisement