How Soon After the Amniotic Fluid Breaks the Baby Will be Born
பனிக்குட நீர் (Amniotic fluid) என்பது கர்ப்பிணி பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதற்காக அதனைச் சுற்றி இருக்கும் பனிக்குடப்பையினுள் இருக்கும் திரவம் (நீர்மம்) ஆகும். கருக்கட்டல் நிகழ்ந்து கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பின்னர் உருவாகும் பனிக்குடப்பை முக்கியமாக நீரினால் நிரப்பப்படும். 10 வாரங்களில் பனிக்குட நீர், குழந்தை வளர்ச்சிக்கு தேவையான கார்போவைதரேட்டு, புரதம், கொழுப்பு உட்பட அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கும்.
குழந்தை சிறுநீர் கழிக்கத் தொடங்கிய பின்னர், இந்த பனிக்குட நீரில் சிறுநீரும் கலந்திருக்கும். குழந்தை வளர வளர இந்த பனிக்குட நீரின் அளவும் அதிகரிக்கும். கருத்தரிப்புக் காலத்தின் 34 வார அளவில் கிட்டத்தட்ட 800 மி.லி. அளவு பனிக்குட நீர் காணப்படும். இந்த அளவு குழந்தை பிறப்புக்கு முன்னர் குறைந்து 600 மி.லி. அளவாகும். குழந்தை பிறப்பின்போது பனிக்குடப்பை உடைந்து பனிக்குட நீர் வெளியேறும். சரி இந்த பனிக்குடம் நீர் உடையும் போது நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டுயவை என்ன என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறக்க போவதற்கான சில அறிகுறிகள்..!
டெலிவரி நேரம் நெருங்கும் போது, குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறிகளுள் ஓன்று பனிக்குடம் உடைவது தான். ஆக உங்களுக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அவர் நிலையை அறிந்து டெலிவரி செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். பனிக்குடம் 37 வாரங்களுக்குள் உடைந்தால் அது Premature rupture of membranes (PROM) என்று கூறப்படுகிறது. எனவே குழந்தை கருவில் முழுவதுமாக வளர்வதற்கு, மருத்துவர் உடனடியாக குழந்தையை டெலிவரி செய்யாமல் சில நாட்கள் காத்திருப்பார்கள். பொதுவாக கர்ப்பிணிகளுக்கு பனிக்குடம் உடைந்த சில நேரத்திலேயே பிரசவ வலி எடுக்கத் தொடங்கும். ஒரு வேளை பனிக்குடம் உடைந்து திரவம் வெளியாக தொடங்கி 24 மணி நேரம் வரை பிரசவவலி இல்லாமல் போனால் மருத்துவர்கள் சிசேரியன் செய்து குழந்தையை எடுத்துவிடுவார்கள். குழந்தையை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாவும் வளர செய்யும் பனிக்குட திரவம் அதிகமாக இருந்தாலும் பிரச்சனை, குறைவாக இருந்தாலும் பிரச்சனை தான். ஆக நீங்கள் எப்பொழுது எல்லாம் ஸ்கேன் செய்து பார்கிறீர்களோ அப்பொழுது எல்லாம் பனிக்குடத்தில் உள்ள நீர் சரியான அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
பனிக்குடம் உடைந்த எவ்வளவு நேரத்தில் குழந்தை பிறக்கும்:
பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் பனிக்குடம் உடைந்த 48 மணி நேரத்திற்குள் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். பொதுவாக பனிக்குடம் உடைவதில் இரண்டு வகைகள் உள்ளது ஒன்று, சொட்டு சொட்டாக திரவம் வெளியேறுவது. மற்றொன்று ஒரேதறியாக உடைந்து ஊற்றுவது. இவற்றில் எந்த நிலையாக இருந்தாலும் சரி உங்கள் உடல் நிலை மற்றும் குழந்தையின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து. குழந்தையை உடனே டெலிவரி செய்யலாமா அல்லது சில மணி நேரம் காத்திருக்கலாம் என்பதை மருத்துவர்கள் தீர்மானம் செய்வார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |