மினரல் வாட்டர் குடிக்கிறீங்களா கண்டிப்பா இதை படியுங்கள்..!

Advertisement

Mineral Water is Good for Health or Not in Tamil

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைவிட கேன் வாட்டர் குடிக்கும் குழந்தைகள் தான் அதிகம் என்பது போல Bubble top water can-களின் புழக்கம் முன்பு இல்லாத வகையில் அதிகரித்து வந்துள்ளது. 2003-ஆம் ஆண்டிலேயே கேன் வாட்டர் விற்பனையில் சென்னை முதல் இடம் பிடித்தது என்றால், தற்போதைய நிலைமையை நாம் சொல்ல வேண்டும். சரி இந்த பதிவில் நாம் மினரல் வாட்டர் அருந்துவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்த தகவலை பார்ப்போம்.

மினார் வாட்டர் பற்றிய தகவல்:

Mineral Water

2018-ஆம் ஆண்டு நிலவரம்படி தமிழ்நாட்டில் மட்டும் 1460 நிறுவங்கள் தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக RO பிளான்களில் சுத்திகரிக்கப்படும் நீரில் அமிலம் மற்றும் கார தன்மையை அகற்றுவதன் மூலம் தண்ணீரில் இருக்க வேண்டிய கேல்சியம்,பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்கள் இலக்கப்படுகின்றன.

இந்த நீரை Demineralized water என்று சொல்வார்கள். இந்த நீர் குடிக்க தகுந்ததல்ல, இந்த நீரை குடிப்பதால் நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வரவாய்ப்புள்ளதாக கூறபடுகிறது.

நீக்கப்பட்ட தாதுக்களை பதிலாக தேவையான அளவு தாதுக்கள் சேர்க்கப்பட்ட நீரையே மினரல் வாட்டர் என்று அழைக்கிறோம். ஆனால் பல நிறுவனகளும் பெயரளவில் முதற்கட்ட சுத்திகருப்புக்கு பின் தண்ணீரை விற்பனை செய்வதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சாப்பிட்ட பிறகு நடப்பவரா நீங்கள்.! அப்போ இதையும் தெரிஞ்சுக்கோங்க..!

நாள்பட்ட Bubble top water கேன்களில் தண்ணீர் குடிப்பதால் டாலிட் எனப்படும் நச்சு பொருள் தண்ணீரில் கலக்க வாய்ப்புள்ளது. எனவே தான் குடிக்க உகந்த நீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ISI 14543 என்ற குறியீடு தண்ணீர் கேன்களில் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

மேலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு CM/L மற்றும் Fssai முத்திரையும் வழங்கப்பட்டிருக்கும். Bubble கேன் முடியிலோ அல்லது கேனின் கழுத்து பகுதியிலோ பக்குடு தேதி, எக்ஸ்பெரி டேட் மற்றும் குறிப்பிட்ட எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

எத்தனை முறை அந்த Bubble கேன் மறுசுழற்சி செய்யப்பட்டிருக்கிறது என்பதை குறிக்கும் எண் தான் அது. 100 முறைக்கு மேல் இரு Bubble வாட்டர் கேன் பயன்படுத்தக்கூடாது என்பது ஒரு விதி அதனால் 100-ம் மேற்பட்ட எண்கள் கேனில் போட்டு இருந்தால் அல்லது எந்த ஒரு எண்ணும் இல்லாமல் இருந்திருந்தால் அந்த Bubble water கேனை வாங்குவதை தவிர்ப்பது பாதுகாப்பான அணுகுமுறையாக அமையும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கரும்பு சாறு குடித்தால் உடலிற்கு இவ்வளவு நன்மைகளா..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement