Sugarcane Juice Benefits in Tamil
கரும்பு என்பது சர்க்கரையை உற்பத்தி செய்யும் தாவரமாகும். கரும்பில் பல வகைகள் உள்ளது. அவற்றில் நம்மில் பலபேருக்கு தெரிந்தது பொங்கல் கரும்பு மற்றும் ஆலை கரும்பு தான். உலகிலேயே . பிரேசில் நாடு தான் அதிக கரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் உள்ளது. ஜீனி செய்வதற்கு மட்டுமே கரும்பு அதிகமாக பயன்படுகிறது. மேலும், வருடத்திற்கு ஒருமுறை வரும் பாரம்பரிய பொங்கல் விழாவில் அதிகம் விற்பனையாவது கரும்பு தான்.
அதுமட்டுமில்லாமல், சாலையோரங்களில் பல இடங்களில் கரும்பு ஜூஸ் கிடைக்கிறது. கரும்பு ஜூஸ் என்றாலே குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி குடிப்பார்கள். முக்கியமாக, வெயில் காலங்களில் கரும்பு ஜூஸின் பயன்பாடு அதிமாக இருக்கும். ஆகையால், கரும்பு ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
What Benefits of Sugarcane Juice in Tamil:
கரும்புச்சாற்றில் சுமார் 70-75 % நீர், 10-15 % நார்ச்சத்து மற்றும் 13-15 % சுக்ரோஸ் உள்ளது.
உடல் ஆற்றலுடன் இருக்க:
வெயில்காலங்களில் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அவ்வாறு இருக்கும் நிலையில் கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடல் ஆற்றலுடன் இருக்கும். அதாவது, கரும்பு சாறில் உலா நீர்ச்சத்து மற்றும் சர்க்கரை நம் உடலிற்கு புதுவிதமான ஆற்றலை அளிக்கிறது.மேலும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது.
உடல் எடை குறைய:
கரும்பு சாறு உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதாவது, இதிலுள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் நீர்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சருமம் பொலிவு பெற:
கரும்பு சாறு சருமத்திற்கு நீரேற்றத்தை அளித்து சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இதனால் சருமத்திற்கு பொலிவை அளிப்பதோடு வயது முதிர்வையும் தடுக்கிறது. இதனால் சருமம் என்றும் இளமையுடன் இருக்கிறது.
செரிமானம் அதிகரிக்க:
கரும்பு சாறில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து எளிதில் செரிமானம் அடைய உதவு செய்கிறது. மேலும், கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் ஆனது, வயிற்று தொற்றுநோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
புற்றுநோய் குணமாக:
கரும்பு சாறில் உள்ள மெக்னீசியம், கால்சியம், இரும்பு , பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் தாதுக்கள் மற்றும் பாலிபினால்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் உடல் புற்றுநோய் செல்களில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கரும்பில் உள்ள ஆன்டி-ப்ரோலிஃபெரேட்டிவ், ஆன்டி-ஆஞ்சியோஜெனிக் மற்றும் ஆன்டி-மெட்டாஸ்டேடிக் ஆகியவை புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது.
கரும்பு சொட்டு நீர் பாசனம் முறை மற்றும் அதன் அவசியம்..!
எலும்புகள் வலுப்பெற:
கரும்பில் உள்ள கால்சியம் உடல் எலும்புகள் மற்றும் பற்களை வலுவடைய செய்து ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது. மேலும், கரும்பு சாறு உட்கொள்வதால் வாய் நுர்நாற்றம் நீங்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |