பப்பாளி இலை நன்மைகள் பற்றிய உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Papaya Leaf Benefits  

பழங்களில் பொதுவாக நிறைய சத்துக்கள் மற்றும் வகைகள் இருந்தாலும் கூட அதில் நாம் அனைத்தினையும் சாப்பிடுவது இல்லை. அதில் நமக்கு ஏதோ பிடித்த மாதிரியாக இருக்கிறதோ அதை மட்டும் தான் விரும்பி சாப்பிடுகிறோம். இத்தகைய பழங்கள் வகைகளில் பப்பாளி பழமும் ஒன்று. பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றி நாம் அனைவருமே தெரிந்து இருப்போம். ஆனால் பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் நம்முடைய உடலிற்கு எப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகிறதோ அதே போல் அதில் உள்ள இலைகளிலும் சத்துக்கள் அடங்கி உள்ளது. அதனால் இன்று பப்பாளி இலையின் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்…!

பப்பாளியில் இலையில் உள்ள சத்துக்கள்:

  • வைட்டமின் A
  • வைட்டமின் B
  • வைட்டமின் C
  • வைட்டமின் E
  • வைட்டமின் K
  • நார்ச்சத்து
  • பொட்டாசியம்
  • இரும்புசத்து
  • கால்சியம்
  • பாஸ்பரஸ்
  • மெக்னீசியம்

கருப்பு பேரீட்சைப்பழம் சாப்பிடுவதாக இருந்தால் இது தெரியாம சாப்பிடாதீங்க..

பப்பாளி இலை நன்மைகள்

டெங்கு காய்ச்சல் குணமாக:

டெங்கு காய்ச்சல் குணமாக

மனிதர்களுக்கு வரக்கூடிய காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளது. அத்தகைய வகைகளில் டெங்கு காய்ச்சலும் ஒன்றாக உள்ளது. இந்த டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கிலத்தில் நிறைய மருந்து மாத்திரைகள் இடம் பெற்றிருக்கும் அந்த வரிசையில் பப்பாளி இலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதாவது பப்பாளி இலையில் இருந்து சாறு செய்வது அருந்துவதன் மூலம் ஆரம்ப டெங்கு காய்ச்சல் குணமாக உதவுகிறது. மேலும் அதற்கான அறிகுறிகளையும் குணப்படுத்துகிறது.

அஜீரண கோளாறு நீங்க:

அஜீரண கோளாறு நீங்க

பப்பாளி இலையில் நார்ச்சத்து அடங்கியுள்ளது. ஆகவே இதனை நாம் ஜூஸாக செய்து குடிப்பதன் மூலம் அஜீரண கோளாறு நீங்கும் மற்றும் குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

தோலில் ஏற்படும் அலர்ஜி:

தோலில் ஏற்படும் அலர்ஜி

அதுமட்டும் இல்லாமல் இத்தகைய பப்பாளி ஜூஸில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது. ஆகவே இதனை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய தோலில் காணப்படும் அலர்ஜி விரைவில் குணமாகிவிடும்.

உடல் எடை குறைய:

உடல் எடை குறைய

இந்த பப்பாளி இலையில் குறைவான அளவு நார்ச்சத்தும், கலோரிகளும் உள்ளது. ஆகவே இதனை நாம் சாறு போல் செய்து எடுத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் நச்சுத்தன்மையினை நீக்கி உடல் பருமனை விரைவாக குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

இத்தகைய பப்பாளி ஜூஸில் வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸினைட்டுகள் இருப்பதன் மூலம் இதனை நாம் குடிப்பதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கூடும்.

நீரிழிவு நோய் குணமாக:

நீரிழிவு நோய்

பப்பாளி இலையில் இருந்து சாறு செய்து குடிப்பதன் மூலம் நீரிழிவு நோயினை விரைவில் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்தும் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளையும் குறைக்க உதவுகிறது.

நோனி பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா 

பப்பாளி இலை சாறு பக்க விளைவுகள்:

  1. பப்பாளி இலையில் இருந்து கிடைக்கக்கூடிய சாற்றினை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் அதிகமாக குடிக்கக்கூடாது. ஏனென்றால் அது மலட்டுத்தன்மையினை ஏற்படுத்தும்.
  2. அதுமட்டும் இல்லாம அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் தோலில் எரிச்சல், அடிக்கடி மலம் கழித்தல், உடலின் மற்ற உறுப்புகளில் எரிச்சல் மற்றும் தலைவலி என இதர பக்க விளைவுகளும் ஏற்படும்.
  3. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கரு கலையும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் உடலில் மஞ்சள் நிறத்தில் சிவந்த புள்ளிகள் போன்ற அமைப்பும் உண்டாகும்.

மாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement