வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சீரகத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா.!

Updated On: January 30, 2024 12:30 PM
Follow Us:
seeragam nanmaigal
---Advertisement---
Advertisement

Seeragam Benefits in Tamil

எல்லார் வீட்டில் அஞ்சறை பெட்டிலும் உள்ள பொருளாக தான் சீரகம் உள்ளது. இதனை சமையலில் ரசம் வைப்பதற்கு பயன்படுத்துவார்கள். சில நேரங்களில் செரிமான பிரச்சனை இருந்தால் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிக்கட்டிகுடிப்பார்கள். இது தான் பெரும்பலானவருக்கு தெரிந்தது. ஆனால் இந்த சீரகத்தில் பல நன்மைகள் இருக்கிறது. இந்த பதிவில் சீரகத்தில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

செரிமான பிரச்சனை:

சீரகம் நன்மைகள்

சீரகமானது செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வை தருகிறது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் 1 தேக்கரண்டி சீரகத்தை 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீரானது கொதித்து 1/2 டம்ளர் ஆனதும் குடிக்க வேண்டும். இராஜை குடிப்பதால் செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பசியின்மை பிரச்சனை இருக்கும். அவர்களுக்கும் இந்த தண்ணீரை குடிப்பதால் நன்றாக பசிக்க ஆரம்பிக்கும்.

மாதவிடாய் வலி:

சீரகம் நன்மைகள்

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலி பிரச்சனை ஏற்படும். இதனை சரி செய்வதற்கு சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

இதற்கு நீங்கள் சீரகத்தை வருது பொடியாக அரைத்து கொள்ளவும். அதன் பிறகு வெல்லம் தூளாக அடித்து கொள்ள வேண்டும். இதில் சீராக பொடி இரண்டையும் மாத்திரை அளவிற்கு எடுத்து மாதவிடாய் வருவதற்கு 2 நாட்களுக்கு முன் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் வயிற்று வலி வராமல் இருக்கும்.

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன..?

இரத்த சோகை:

 

சரியான உணவு முறை இல்லாததால் இரத்த சோகை பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது . இரத்த சோகை பிரச்சனைக்கு சீரகம் பெரிதும் உதவுகிறது, இதற்கு நீங்கள் தினமும் உங்கள் உணவில் சீரகத்தை சேர்த்து வர வேண்டும்.

எலும்பு வலிமை:

seeragam payngal

எலும்பு வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து பெரிதும் உதவுகிறது. இந்த சீரகத்தில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதனால் தினமும் உணவியல் சீரகத்தை சேர்த்து கொள்ளுங்கள். இதனால்ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஒரு ஸ்பூன் சீரகம் தூள் மற்றும் மிளகு ஆகியவற்றை மோரில் கலந்து தினமும் குடித்து வாருங்கள். இதனால் உடல் குளிர்ச்சி அடைவதோடு மட்டுமில்லாமல் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது.

எடை குறைய:

சீரகத்தில் கலோரிகள் குறைவாக இருக்கிறது, அதனால் இவை செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமில்லாமல் உடல் எடையை குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.

தாய்ப்பால் சுரக்க:

seeragam payngal

சீரகம் தாய்ப்பால் சுரப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இதற்கு நீங்கள் சீரகத்தை வறுத்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இதனை பாலில் சேர்க்க வேண்டும். இனிப்புக்காக சிறிதளவு சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

பெருஞ்சீரகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை