ஒரு மாசத்துக்கு டீ, காபிக்கு நோ சொல்லுங்க என்ன நடக்குதுன்னு பாப்பும்..

what happens if you don't drink tea for a month in tamil

டீ குடிக்காமல் இருந்தால் என்ன நடக்கும்

பலரும் காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு டீயை குடித்தால் தான் அன்றைய நாள் விடியும். டீயை குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது என்று உணர்கிறார்கள். மேலும் உடல் சோர்வாக இருந்தாலும் சரி, தலை வலித்தாலும் சரி டீயை குடிக்கிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிப்பது பிரச்னையில்லை அதுவே 6 அல்லது 7 முறை டீ குடித்தால் உடலுக்கு தீங்கினை விளைவிக்கும். அதனால் நீங்கள் ஒரு டெஸ்ட் பண்ணி பாருங்க அதாவது ஒரு மாசத்துக்கு டீ, காபி குடிக்காம இருந்து பாருங்க, உடலில் என்ன நடக்குதுன்னு பாருங்க..

டீ, காபி குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்:

டீ குடிக்காமல் இருந்தால் என்ன நடக்கும்

நெஞ்செரிச்சல் இல்லாமல் இருக்கும்:

டீ மற்றும் காபியில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. இதனால் குடல், வயிறு, நெஞ்சு போன்றவற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. அதனால் நீங்கள் டீ, காபி குடிக்காமல் இருப்பதால் நெஞ்செரிச்சலை தவிர்க்க முடியும்.

தூக்கம்:

டீ, காபி அதிகமாக குடிப்பதால் தூக்கம் குறைவாக தூங்குவீர்கள். அதனால் நீங்கள் ஒரு மாசத்துக்கு டீ குடிக்காமல் இருந்து பாருங்க நன்றாக தூங்குவீங்க..

பற்கள் வெண்மை:

சூடாக டீயை, காபி குடிப்பதால் பற்களின் நிறத்தை மாற்றும். மேலும் பற்களின் நிறத்தை மாற்றுவதோடு மட்டுமில்லாமல் பற்கள் பலவீனம் உடையதாக இருக்கும். அதனால் நீங்கள் டீ, காபி குடிக்காமல் இருந்தால் பற்களின் நிறம் வெள்ளையாக இருப்பதை நீங்களே காண்பீர்கள்.

சாதம் சாப்பிடுவதை 1 மாதம் மட்டும் நிறுத்தினால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா..?

குறைந்த இரத்த அழுத்தம்:

டீயானது உடல் சோர்விலிருந்து புத்துணர்ச்சி அளித்தாலும் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துகின்றன. இதனை தவிர்ப்பதற்கு நீங்கள் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒற்றை தலைவலி: 

காபி அதிகமாக குடிப்பது ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் ஒற்றை தலைவலியை அனுபவித்தால் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

யாரெல்லாம் டீ, காபி குடிக்க கூடாது:

நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் டீயை குறைவாக குடிக்க வேண்டும்.

இரும்புசத்து குறைபாடு உள்ளவர்கள் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

டீக்கு பதில் என்ன குடிக்கலாம்:

டீயை குடித்து கொண்டே இருந்தவர்கள் திடீரென்று நிறத்த முடியாது, டீ குடிக்கிற நேரத்திற்கு டீயை குடிக்கணும் போல இருக்கும், அதனால் அந்த நேரத்தில் நீங்கள் தண்ணீர் நிறைய குடிக்கலாம். இல்லையென்றால் பழச்சாறு வைத்து குடிக்கலாம்.

கருப்பு உளுந்தை சாப்பாட்டில் அதிக அளவு சேர்த்து கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்