அரணை கடித்தால் என்ன ஆகும் ?

Advertisement

அரணை கடித்தால் விஷமா ?

பாம்பை போல் இருக்கும் இந்த அரணைக்கு பாம்புராணி என இன்னொரு பெயரும் உண்டு. நிறைய மக்கள் அரணை கடித்தால் விஷம் இறந்துவிடுவார்கள் என நினைக்கிறார்கள். நிறைய விஷ ஜந்துகள் நாம் வாழும் பூமியில் இருக்கதான் செய்கின்றன. அவைகளில் எது விஷம் எது விஷத்தன்மை அற்றது என நமக்கு தெரிவதில்லை. பார்ப்பதற்கு பயமுறுத்தும் தோற்றம் கொண்ட உயிரினத்தை உடனே விஷம் என்று அந்த காலத்தில் இருந்து நம்புகிறோம். ஆம், சட்டென்று பார்ப்பதற்கு பாம்பு போல் இருப்பதனால் அரணையை பாம்பு போலவே இதுவும் விஷத்தன்மை உள்ளது என பலரும் நம்பி வருகிறார்கள். உண்மையில் அரணை கடித்தால் விஷமா இறந்துவிடுவார்களா ? என சந்தேகம் உங்களுக்கு இருக்கும் மேலும் அரணையை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

உண்மையில் அரணை கடித்தால் விஷமா?

உண்மையில் அரணை கடித்தால் விஷமா

உண்மையில் அரணை ஒரு அப்பாவி  உயிரினம் இது விஷத்தன்மை இல்லாதது. பலரும் இது கடித்தால் அல்லது நாக்கால் நக்கிவிட்டால் இறந்துவிடுவோம் என பயப்படுகிறார்கள். இது தவறான நம்பிக்கை. அரணைக்கு முதலில் பல்லே கிடையாது. அது எப்படி கடிக்க முடியும். அது ஒரு நியாபக மறதி உள்ள உயிரினம். அது ஒரு இரையை பார்த்து சாப்பிட போகுவதற்குள் அதற்கு எதை பிடிக்க போகிறோம் என்பதே மறந்துவிடுமாம். அந்தளவுக்கு நியாபக மறதி உள்ள உயிரினம் அரணை. அதிலும் வாலில் சிவப்பு நிறம் உள்ள அரணை கடித்தால் உடனே விஷம் ஏரி அறை மணி நேரத்தில் இறந்துவிடுவார்கள்  என்பார்கள். பலவகையான  நிறத்தில் அரணைகள் இருக்கின்றன. அது எந்த நிறம் கொண்ட  அரணையாக இருந்தாலும்  விஷத்தன்மை கிடையாது.

உங்கள் நம்பிக்கையின்படி அப்படி உங்களை அரணை கடித்துவிட்டது என்றால் பயப்படவேண்டாம். சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள் அரணை கடித்து நிறைய பேர் இறந்துருக்கிறார்கள் என அது அவர்களின் பயத்தினால்  இதய நோய் பதட்டம் அதனால் கூட இறந்துபோகிருக்கலாம்.

அரணை கடித்தால் அலர்ஜி வேண்டுமானால் ஏற்படலாம் என கூறப்படுகிறது. மற்றபடி பயப்படும் அளவிற்க்கு ஒன்றும் கிடையாது. அப்படியும் உங்களுக்கு பயம் இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகலாம்.

  பாம்பு கடித்தால் அறிகுறிகள் 

 

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement